- புதிய இவி ரேஞ்ச் தொடங்கும் XUV.e8 உடன்
- ஃப்ரண்ட் மற்றும் ரியர் லூக் XUV700 இலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்
மஹிந்திரா தனது புதிய இவி ரேஞ்சை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடலாம். இதற்கான ஏற்பாடுகள் பிராண்ட் தரப்பில் இருந்து முழுவீச்சில் நடந்து வருகிறது. XUV.e8 கடந்த மாதங்களில் பலமுறை தென்ப்பட்டது, இது மஹிந்திராவின் XUV700 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் சைஸ் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் தெரிகிறது. சமீபத்தில், இந்த புதிய எலக்ட்ரிக் கார் மீண்டும் ஒரு முறை தென்ப்பட்டது, இதில் அதன் இன்டீரியர் தொடர்பான புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சமீபத்திய ஸ்பை படங்களில், புதிய XUV.e8 அதன் டாஷ்போர்டில் மூன்று ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டிருப்பதை தெளிவாகக் காணலாம். இது ஒரு டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முன்பக்க பயணிகளுக்கு கூடுதல் டிஸ்பிளே யூனிட்டாக இருக்கும்.
இது தவிர, மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியில் புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இருக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். இருப்பினும், XUV.e8 இன் எக்ஸ்டீரியர் ஆனது பிராண்டின் தற்போதைய XUV700 இலிருந்து சற்று வித்தியாசமாக தெரிகிறது. இருப்பினும், ஒப்பிடுகையில், புதிய அலோய் வீல்ஸ், மாற்றப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய முக்கோண ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய கிரில் ஆகியவை வழங்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த முன் தோற்றமும், ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ் டிசைன் ஒரே மாதிரியாக வைக்கப்பட்டுள்ளன.
பவர் வெளியீடு பற்றி பேசுகையில், புதிய XUV.e8 இன் தொழில்நுட்ப விவரங்களை மஹிந்திரா இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், எங்கள் யூகத்தின்படி, இது 80kWh பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்படும். இது, அறிமுகப்படுத்தப்படும் போது, வரவிருக்கும் டாடா ஹேரியர் மற்றும் டாடா சஃபாரி இவி போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியாக இது இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்