- மஹிந்திரா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இவி ரேஞ்சை அறிமுகப்படுத்தும்
- XUV.e8 ஆனது XUV700 ஐ அடிப்படையாகக் கொண்டது
ஆகஸ்ட் 2022 இல் யுனைடெட் கிங்டமில் (யுகே) இல் நடந்த நிகழ்வின் போது மஹிந்திரா பல எலக்ட்ரிக் மாடல்களைக் காட்சிப்படுத்தியது. இந்த இவிகளில் முதலாவது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும், மேலும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
மஹிந்திரா XUV.e8 வரவிருக்கும் முதல் காராக இருக்கும், அதன் அறிமுகத்திற்கு முன்பே, இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியின் முக்கிய அம்சங்கள் லீக் ஆனது. ரேஜிஸ்டர் செய்யப்பட்ட டிசைன் மஹிந்திரா XUV.e8 இன் ப்ரொடக்ஷன் ரெடி உள்ள எக்ஸ்டீரியர்ரை வெளிப்படுத்துகிறது. எவ்வாறாயினும், அதன் ஃப்ரண்ட் லூக் மற்றும் டிசைன் எலிமெண்ட்ஸ் தக்கவைக்கப்பட்டுள்ளன, சுற்றிலும் காப்பர் இன்சர்ட்ஸ், ஏரோ-இன்ஸ்பயர்ட் வீல்ஸ், பிளாக்-ஆஃப் கிரில், புதிய ஃப்ரண்ட் பம்பர் மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ். இது தவிர, ஃப்ரண்ட்டில் எல்இடி லைட் பார் கிடைக்கும்.
2024 மஹிந்திரா XUV.e8 இன் இன்டீரியரில் த்ரீ-ஸ்கிரீன் செட்-அப்பை கொண்டிருக்கும். டிரைவர் சீட்க்கு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் சென்டர் கன்சோலில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும்.
தற்போது, அதன் மூன்றாவது திரையில் காட்டப்படும் தகவல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மஹிந்திராவால் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது எலக்ட்ரிக் எஸ்யுவி ஆனது புதிய டூ-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலை மையத்தில் ரெட் நிறச் இன்சர்ட் மற்றும் பிளாக் ஸ்கிரீனில் 'BE' பிராண்டிங்கைக் கொண்டிருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்