- பெட்ரோல் இன்ஜினில் என்ட்ரி-லெவல் ஆட்டோமேட்டிக் வேரியன்டாக MX ஏடீ இருக்கும்
- இதன் விலை குறைந்தபட்சமாக 16 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும்
மஹிந்திரா தனது மிகவும் பிரபலமான எஸ்யுவியின் வேரியன்ட்களின் பட்டியலை மாற்றப் போகிறது. இப்போது இந்த மாடலில் என்ட்ரி லெவல் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் MX சேர்க்கப்படும். இது தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் MX, AX3, AX5, AX7 மற்றும் AX7L ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் வாங்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை:
தற்போது, MX வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது. 14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதேசமயம் வரவிருக்கும் புதிய MX ஏடீ வேரியன்ட்டின் விலை கூடுதலாக ரூ. 1.50-1.80 லட்சம் வரை இருக்கலாம்.
அம்சங்கள்:
மஹிந்திரா XUV700 இன் பேஸ் வேரியன்ட் MX ஆனது எய்ட் இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஏழு இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நான்கு பவர் விண்டோக்கள், பவர்ட் ஓஆர்விஎம்கள் மற்றும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கைகளுக்கான ஆர்ம்ரெஸ்ட்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்ஜின்:
இன்ஜினைப் பற்றி பேசுகையில், MX வேரியன்ட் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது 197bhp மற்றும் 380Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த புதிய வேரியன்ட்டின் பவர் மற்றும் மைலேஜ் அதன் AX பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் போலவே இருக்கும் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்