- இது புதிய ஹெட்லேம்ப்களுடன் புதிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்
- இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்
XUV400 ஃபேஸ்லிஃப்ட், XUV300 ஃபேஸ்லிஃப்ட், XUV700 இவி மற்றும் ஃபைவ்-டோர் தார் உள்ளிட்ட பல மாடல்களை மஹிந்திரா டெஸ்ட் செய்து வருகிறது. வரவிருக்கும் மாடல்களில், XUV700 இவி அல்லது XUV.e8 சமீபத்தில் டெஸ்ட் செய்யப்பட்டது, இது வரவிருக்கும் டாடா ஹேரியர் இவி’க்கு போட்டியாக இருக்கும் மாடல் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்துகிறது.
இங்கே படத்தில் காணப்படுவது போல், XUV.e8 ஆனது முழு அகல லைட் பார் ஐ பெறுகிறது, இது ஒரு பிளாக்-ஆஃப் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்பர் மற்றும் பெரிய ஏர் இன்லெட்ஸ் மற்றும் முற்றிலும் புதிய தோற்றமுள்ள ஹெட்லேம்ப் யூனிட் க்யூபிகல் வடிவ ஹெட்லேம்புடன் உள்ளது. மேலும், இது ஸ்டாண்டர்ட் XUV700 இலிருந்து வேறுபடுத்த ஏரோ-டிசைன் அலோய் வீல்களையும் பெறுகிறது. மேலும், எஸ்யுவியின் சைட் ப்ரோஃபைலில் ஃப்ளஷ் பொருத்தும் டோர் ஹேண்டல்ஸ்ஸை பெறும்.
இதேபோல், ரியரில் குறைந்தபட்ச மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, அதாவது பெரும்பாலான அம்சங்கள் ஐசிஇ வெர்ஷனிலிருந்து எடுக்கப்படும். இது ஹை- மவுண்டட் ஸ்டாப் லைட்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர், எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லருடன் ரியரில் கவர்ச்சிகரமான பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
முந்தைய ஸ்பை படங்களில் இதன் இன்டீரியரைப் பார்த்தோம், இதில் இந்த எலக்ட்ரிக் XUV700 இன் கேபின் புதிய தோற்றத்தில் இருக்கும். புதிய ட்வின் ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய யுஐ கொண்ட ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய கியர் செலக்டர் லெவர், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் டிரைவருடன் முன்பக்க பயணிகளுக்கு மூன்றாவது ஸ்கிரீனும் இருக்கும்.
வரவிருக்கும் மஹிந்திரா XUV.e8 ஆனது ஒற்றை ஃப்ரண்ட்- அக்சலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 80kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். இந்த மாடலின் நீளம் 4,740 மிமீ மற்றும் அதன் வீல்பேஸ் 2,762 மிமீ ஆக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்