- டிசம்பர் 2024 இல் லான்ச் செய்யப்படும்
- 60 முதல் 80kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்திரா ஏற்கனவே XUV400 உடன் இந்தியாவில் இவி செக்மென்ட்டில் நுழைந்துள்ளது. இப்போது, இந்திய கார் தயாரிப்பாளர் XUV700 இன் எலக்ட்ரிக் வெர்ஷனில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2022 இல் மற்ற நான்கு இவி கான்செப்ட்ஸுடன் காட்சிப்படுத்தப்பட்டது, XUV700 எலக்ட்ரிக் பெரும்பாலும் XUV.e8 என்று அழைக்கப்படும்.
மஹிந்திரா XUV700 இவி ஸ்டைலிங்
ஸ்பாட் செய்ய பட்ட டெஸ்ட் ம்யூல் ஒரு பகுதி உருமறைப்பு மாடலாக இருந்தது மற்றும் ஐசிஇ XUV700 இலிருந்து அதை பிரிக்கும் தெளிவான ஸ்டைலிங் குறிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், கடந்த ஆண்டு யுகேயில் காட்சிப்படுத்தப்பட்டபோது, XUV.e8 ஆனது 2,762mm வீல்பேஸுடன் 4,740mm நீளத்தை அளக்கும் என்று மஹிந்திரா கூறியது. இந்த எண்கள் எலக்ட்ரிக் எஸ்யுவி ஸ்டாண்டர்ட்வெர்ஷனை விட பெரியதாகவும் நீளமாகவும் இருக்கும் மற்றும் பெரிய பேட்டரி பேக்கில் பேக் செய்யப்படும் என்பதைக் குறிக்கிறது.
மஹிந்திரா XUV700 இவி பேட்டரி பேக் விவரங்கள்
XUV.e8 ஆனது 60 முதல் 80 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் மற்றும் ஸ்டாண்டர்ட்ஆல்-வீல்-டிரைவ் கான்ஃபிகரேஷனை பயன்படுத்தும் என்பதை மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. பவர் வெளியீடு 250bhp மற்றும் 350Nm இடையே இருக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா XUV700 இவி லான்ச் டைம்லைன்
டிசம்பர் 2024 இல் அறிமுகம் செய்யப்படுவதால், ஃபிளாக்ஷிப் XUV700 இன் எலக்ட்ரிக் வெர்ஷன் இங்க்ளோ பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்ற காருக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்