- XUV700 இன் இந்த வேரியன்ட்டில் சில அம்ச புதுப்பிப்புகள் கிடைக்கின்றன
- இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
மஹிந்திரா இன்று நாட்டில் XUV700 இன் மற்றொரு புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கு AX5 செலக்ட் (AX5 S) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 16.89 லட்சம். வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் லக்சுரி ஃபீல் வழங்குவதே இந்த புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்துவதற்கான காரணம்.
ஃபுல்-சைஸ் வீல் கவர்கள், எல்இடி டெயில்லைட்ஸ், ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் இந்த XUV700 AX5 செலக்ட் வேரியன்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த வேரியன்ட் ஏழு சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது.
இந்த புதிய வேரியன்ட்டில் பனோரமிக் சன்ரூஃப், டூயல் எச்டி 10.25 இன்ச் ஸ்கிரீன், அட்ரினோக்ஸ் கனெக்டெட் கார் டெக்னாலஜி, வயர்லெஸ் மொபைல் கனெக்ட், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல், ஐசோஃபிக்ஸ் மவுன்ட்ஸ், ஸ்டோரேஜ் ஃபங்ஷன் கொண்ட ஃப்ரண்ட் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் மூன்றாம் வரிசையில் ஏசி வென்ட்ஸ் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
மஹிந்திரா சமீபத்தில் 7-சீட்டர் MX வேரியன்ட் மற்றும் AX7L வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்ட லிமிடெட் எடிஷனான ப்ளேஸ் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தியது, இதில் ப்ளேஸ் ரெட், டூயல்-டோன் பிளாக் எக்ஸ்டீரியர் எலிமென்ட்ஸ் மற்றும் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் கொண்ட ஃபுல் பிளாக் இன்டீரியர், போல்ட் மற்றும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
XUV700 இன் வேரியன்ட் வாரியான புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட் | சீட்டிங் கபாஸிட்டி | ஆரம்ப எக்ஸ்-ஷோரூம்விலை | |
பெட்ரோல் (எம்டீ) | டீசல் (எம்டீ) | ||
MX | 5-சீட்டர் | ரூ. 13.99 லட்சம் | ரூ. 14.59 லட்சம் |
7- சீட்டர் | ரூ. 14.49 லட்சம் | ரூ. 14.99 லட்சம் | |
AX3 | 5- சீட்டர் | ரூ. 16.39 லட்சம் | ரூ. 16.99 லட்சம் |
AX5 செலக்ட் (AX5 S) | 7- சீட்டர் | ரூ. 16.89 லட்சம் | ரூ. 17.49 லட்சம் |
AX5 | 5- சீட்டர் | ரூ. 17.69 லட்சம் | ரூ. 18.29 லட்சம் |
7- சீட்டர் | ரூ. 18.19 லட்சம் | ரூ. 18.79 லட்சம் |
XUV700 AX5 S ஆனது 2.0-லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்