- ஜனவரி 2023 இல் XUV400 லான்ச் செய்யப்பட்டது
- இது இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
மஹிந்திரா தனது முதல் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 ஜனவரி 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது இரண்டு வேரியண்ட் விருப்பங்களுடன் அறிமுக விலையில் ரூ. 15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த விலையானது ஒவ்வொரு வேரியண்ட்டின் முதல் 5,000 யூனிட்ஸ்க்கும் செல்லுபடியாகும்.
தற்போது, மஹிந்திரா XUV400 ஒரு கட்டமாக டெலிவரி செய்யப்படுகிறது மற்றும் சமீபத்தில், கார் தயாரிப்பாளர் முதல் தொகுதியின் 400 யூனிட்ஸை டெலிவரி செய்தது. இருப்பினும், ஆர்வமுள்ள வாங்குபவர்கள் எலக்ட்ரிக் எஸ்யுவியின் டெலிவரியைப் பெற அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். தற்போதுள்ள நிலையில், XUV400 முன்பதிவு செய்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை காத்திருக்கும் காலத்தை கட்டளையிடுகிறது.
XUV400 இன் அம்சப் பட்டியலில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய ஏழு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்ஸ், டைரக்ஷன்ஸுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிரைவ் மோட்ஸ், 60:40 ஸ்ப்ளிட் ரியர் சீட்ஸ், எல்இடி டிஆர்எல்ஸுடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 16-இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் பல ஆகியவை அடங்கும்.
அதன் விவரக்குறிப்புகளின் அடிப்படையில், XUV400 இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் கிடைக்கிறது - ஒரு 34.5kWh மற்றொரு 39.4kWh யூனிட். 148bhp மற்றும் 310Nm டோர்க் வெளியீடும் இரண்டு வெர்ஷன்ஸ்க்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், எம்ஐடிசி-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 375km மற்றும் 456km என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை 3.3kW மற்றும் 7.2kW சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்