- மூன்று வேறியண்ட்ஸில் கிடைக்கும்
-1.2-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் உடன் கிடைக்கும்
மஹிந்திரா BS6 ஃபேஸ் 2 XUV300 டர்போஸ்போர்ட்டை மார்ச், 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது, உற்பத்தியாளர் எஸ்யுவியின் விலைகளைத் திருத்தியுள்ளார். இந்த கார் மூன்று ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது - W6, W8 மற்றும் W8(O) மோனோடோன் மற்றும் டூயல்-டோன் வண்ண விருப்பங்களுடன்.
W8(O) வேறியண்ட்ஸ் அதிகபட்சமாக ரூ. 43,000 மற்றும் அதே ட்ரிம்ஸில் உள்ள டூயல்-டோன் வேறியண்ட்ஸ் ரூ. 40,400 வரை உயர்வு பெறும்.W6 மற்றும் W8 வேறியண்ட்ஸின் விலை ரூ. 36,400 மற்றும் ரூ. 37,300 ஆகும்.
அதே சமையதில்XUV300 டர்போஸ்போர்ட் ஆனது 1.2-லிட்டர் டர்போசார்ஜ்ட் எம்ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின் மூலம் ட்யூன் செய்யபட்டுள்ளது இது 128bhp பவரையும் மற்றும் 230Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும். இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, 250Nm டோர்க்கை ஓவர்-பூஸ்ட் செயல்பாட்டுடன் வழங்குகிறது. மேலும், இந்த மோட்டார் BS6 ஃபேஸ் -2 மற்றும் ஆர்டிஇ யின் விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது.
மஹிந்த்ரா எஸ்யுவியின் திருத்தப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலைகள்:
மஹிந்த்ரா XUV300 டர்போஸ்போர்ட் W6 – ரூ. 10.71 லட்சம்
மஹிந்த்ரா XUV30 0டர்போஸ்போர்ட் W8 – ரூ. 12.02 லட்சம்
மஹிந்த்ரா XUV300 டர்போஸ்போர்ட் W8 டூயல் டோன் – ரூ. 12.14 லட்சம்
மஹிந்த்ரா XUV300 டர்போஸ்போர்ட் W8(O) – ரூ. 13.18 லட்சம்
மஹிந்த்ரா XUV300 டர்போஸ்போர்ட் W8(O) டூயல் டோன் – ரூ. 13.30 லட்சம்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்