- மஹிந்திரா 3X0 முதல் முறையாக இன்று அதன் குறும்படத்தை டீஸ் செய்துள்ளது
- இது XUV300 இன் தற்போதைய மாடலின் இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் உலகளாவிய அறிமுகத்தை ஏப்ரல் 29 அன்று அறிவித்துள்ளது, இது இன்று டீஸ் செய்யப்பட்டது. இந்திய எஸ்யுவி உற்பத்தியாளர் இந்த அப்டேடட் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவிக்கு மஹிந்திரா XUV 3X0 என பெயரிட்டுள்ளது, மேலும் இந்த புதிய பெயர் முழு ரேஞ்சுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
புதிய மஹிந்திரா XUV 3XO வின் டீஸரில் இதன் பல புதிய அம்சங்கள் வெளியாகி உள்ளன, ஃப்ரண்ட் லூக்கை மேம்படுத்த புதிய ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி ப்ரொஜெக்டர், ரவுண்ட் ஃபாக் லைட்ஸ், எல்-வடிவ எல்இடி டிஆர்எல்கள்,டைமண்ட் பேட்டர்ன் கொண்ட புதிய கிரில், புதிய டூயல் டோன் அலோய் வீல்ஸ் மற்றும் புதிய எல்லோ கலர் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது புதிய சி வடிவ எல்இடி டெயில்லைட்கள், டெயில்கேட்டில் கனெக்டெட் எல்இடி லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் பின்புறத்தில் 'XUV 3XO' எழுத்துகள் ஆகியவற்றைப் பெறும்.
2024 XUV300 அதாவது XUV 3X0 இன் இன்டீரியரில் ஒரு புதிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும், இது 10.25-இன்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய அப்ஹோல்ஸ்டரி, கவர்ச்சிகரமான சென்டர் கன்சோல் மற்றும் புதிய ஏசி வென்ட்களும் வழங்கப்படலாம்.
இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருபங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் வழங்கப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், புதிய XUV 3X0 மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்