- இது கவர்ச்சிகரமான சி-வடிவ எல்இடி டிஆர்எல்களைக் கொண்டிருக்கும்
- பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனுடன் கூடிய புதிய இன்டீரியர்
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் வரும் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம். புதுப்பிக்கப்பட்ட ஸ்பை படங்களில் இப்போது வரவிருக்கும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் ப்ரொடக்ஷன் ரெடி மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய ஸ்பை ஷாட்களைப் போலல்லாமல், புதிய ஷாட்ஸில் எஸ்யுவியின் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள் மற்றும் கிரில் ஆகியவற்றின் வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன. இது சி-வடிவ எல்இடி டிஆர்எல்களுடன் ஸ்ப்ளிட் ஹெட்லைட்களுடன் கூடிய கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் பம்பர், நடுவில் மஹிந்திரா ட்வின்-பீக் லோகோவுடன் ஒரு மெல்லிய கிரில் மற்றும் பெரிய ரேடியேட்டர் கிரில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
புதிய XUV300 ரியரில் இன்-டிரெண்ட் கனெக்டெட் எல்இடி டெயில்லைட் செட்-அப். கூடுதலாக, ரியரில் ஒரு சிறிய டெயில்கேட், பிரதிபலிப்பான்களுடன் கூடிய பெரிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், இன்டெக்ரேட்டட் ஹை-ரேஸிலியன்டலி மவுண்டட் ஸ்டாப் லேம்ப், ரியர் வைப்பர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனாவுடன் எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவற்றால் சிறப்பிக்கப்படும்.
இன்டீரியரைப் பற்றி பேசுகையில், XUV300 கேபினில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டீயரிங் வீல், ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் எச்விஏசி பேனல் மற்றும் புதிய இன்டீரியர் தீம் கொண்ட புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி போன்ற பல புதுப்பிப்புகளைப் பெறும். இது தவிர, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்களையும் வழங்கலாம்.
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்டதும், புதுப்பிக்கப்பட்ட XUV300 கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ரெனோ கைகர், நிசான் மேக்னைட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
பட ஆதாரம்: மோட்டார் பீம்