- ஃப்ரண்ட் மற்றும் ரியரில் புதிய டிசைன்னை இது கொண்டிருக்கும்
- இன்டீரியரில் ஒரு பெரிய மாற்றத்தைப் பெறும்
மஹிந்திரா தனது என்ட்ரி லெவல் காம்பாக்ட் எஸ்யுவி XUV300 இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இந்த மாடல் மீண்டும் இந்திய சாலைகளில் மீண்டும் சோதனையில் காணப்பட்டது, இது வரும் மாதங்களில் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்களிலிருந்து, ஃபேஸ்லிஃப்ட் XUV300 இல் முற்றிலும் ரிடிசைன் செய்யப்பட்ட ரியர்ரை இது பெறும். இது சி-வடிவ எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் லைட் பார், புதிய பம்பர், ஹை-மவுண்டட் ஸ்டாப் லேம்புடன் கூடிய எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லர், டிஃபோகர் மற்றும் ரூஃப் ரெயில்களுடன் ரியர் வைப்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
XUV300 இன் கேபினில் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XUV400 போலவே, இது ஒரு புதிய டச்ஸ்கிரீன் கொண்ட புதிய டேஷ்போர்டு அமைப்பைப் பெறலாம். XUV300 ஃபேஸ்லிஃப்ட்டில் ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் ஏர்கான் பேனல் மற்றும் அப்டேட்ட அப்ஹோல்ஸ்டரியை இது பெறலாம்.
2024 XUV300 இல் தற்போதுள்ள அதே 1.2- லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ டிரான்ஸ்மிஷனில் வழங்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
பட ஆதாரம்: ரஷ்லேன்