- இம்மாதம் 29ம் தேதி அறிமுகமாகும்
- இது புதிய இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரைப் பெறும்
மஹிந்திரா சமீபத்தில் தனது வரவிருக்கும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் பெயரை XUV 3XO என மறுபெயரிடுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாடலில், வாகன உற்பத்தியாளர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸில் புதிய வடிவமைப்புகளைப் பெறுவதை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் புதிய டீசரையும் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த புதிய டீசரிலிருந்து வரவிருக்கும் எஸ்யுவியின் இன்டீரியர் பற்றி தெரிந்து கொண்டோம், இந்த கட்டுரையில் நாம் இதை பற்றி விவாதிப்போம்.
தற்போதைய மாடலைக் காட்டிலும் வரவிருக்கும் மஹிந்திரா XUV 3XO இன் அம்சங்கள் மற்றும் டெக்னாலஜியில் எந்தக் குறைவும் இருக்காது. டீசரில் பார்த்தபடி, இந்த மாடல் செக்மென்ட்-ஃபர்ஸ்ட் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும். மேலும், இதன் டாஷ்போர்டுXUV400 போன்று புதியதாக தெரிகிறது. இது ஒரு ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஸ்டீயரிங் வீல், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எச்விஏசி பேனல், ஏசி வென்ட்ஸ் மற்றும் புதிய கியர் லெவருடன் புதிய சென்டர் கன்சோல் ஆகியவற்றைப் பெறுகிறது.
XUV 3XO இன் எக்ஸ்டீரியரில் இன்வெர்டேட் சி- வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டூயல்-புரொஜெக்டர் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்களுடன் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ரியரில், பெரிய கனெக்டெட் எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் புதிய 'XUV 3XO' பேட்ஜிங்குடன் கிடைக்கும்.
இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருபங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் வழங்கப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும். லான்ச்க்குப் பிறகு, மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ரெனோ கைகர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்