- இது ஒன்பது வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த காருக்கு நல்ல டிமாண்ட் காணப்பட்டது
மஹிந்திரா XUV 3XO அறிமுகமானதிலிருந்து இந்தியா முழுவதும் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், மஹிந்திராவின் இந்த எஸ்யுவி கார் அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் 50,000 யூனிட்டுகளுக்கு மேல் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
XUV 3XO ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 7.49 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) வைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ஒன்பது வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் MX1, MX2, MX2 ப்ரோ, MX3, MX3 ப்ரோ, AX5 லக்சுரி, AX7 மற்றும் AX7 லக்சுரி அடங்கும்.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், அதன் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்’ஸ், ஆறு ஏர்பேக்ஸ், நான்கு பவர் விண்டோ, ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் லெவல்-2 ஏடாஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்ட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
மஹிந்திரா தனது XUV 3XO டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, டிரான்ஸ்மிஷனைப் பார்த்தால், இந்த காரில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் யூனிட் ஆப்ஷன்கள் உள்ளன.
தற்போது, மஹிந்திரா XUV 3XO-ஐ முன்பதிவு செய்யும் தேதியிலிருந்து வாங்குபவர்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்