- புதிய XUV 3XO மூன்று இன்ஜின் விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- இது செக்மென்ட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
மஹிந்திரா இந்தியாவில் XUV 3XO ஐ நேற்று 30th ஏப்ரல் 2024 அன்று அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 7.49 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்). இந்த மாடல் XUV300 இன் புதிய வெர்ஷனாகும், இதற்கான முன்பதிவு மே 15 முதல் தொடங்கும் மற்றும் மே 26 முதல் டெலிவரி தொடங்கும்.
XUV 3XO1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.2-லிட்டர் டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய மூன்று விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 109bhp/200Nm டோர்கையும், டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் 129bhp/230Nm டோர்கையும், டீசல் இன்ஜின் 115bhp/300Nm டோர்கையும் உற்பத்தி செய்கிறது. 6-ஸ்பீட் மேனுவல் யூனிட், ஏஎம்டீ யூனிட் மற்றும் 6-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட் டிரான்ஸ்மிஷன் இந்த இன்ஜின்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய மஹிந்திரா XUV 3XO இன் வேரியன்ட் வாரியான ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட மைலேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வெர்ஷன் | மைலேஜ் |
XUV 3XO 1.2 டர்போ-பெட்ரோல் எம்டீ | லிட்டருக்கு 18.89 கிமீ |
XUV 3XO 1.2 டர்போ-பெட்ரோல் ஏடீ | லிட்டருக்கு 17.96 கிமீ |
XUV 3XO 1.2 டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டீ | லிட்டருக்கு 20.10 கிமீ |
XUV 3XO 1.2 டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் ஏடீ | லிட்டருக்கு 18.20 கிமீ |
XUV 3XO 1.5 டீசல் எம்டீ | லிட்டருக்கு 20.60 கிமீ |
XUV 3XO 1.5 டீசல் ஏஎம்டீ | லிட்டருக்கு 21.20 கிமீ |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்