- ஸ்கார்பியோ க்ளாசிக் டீசல் இன்ஜின் மூலம் மட்டுமே இயக்கப்படுகிறது
- இந்த எஸ்யுவி 4WD அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது
இந்திய ராணுவம் 1,850 யூனிட்ஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக் எஸ்யுவியை ஆர்டர் செய்துள்ளது. ஜனவரி 2023 இல், இந்திய வாகன உற்பத்தியாளர் 1,470 ஸ்கார்பியோ க்ளாசிக் யூனிட்ஸை ராணுவத்திற்கு வழங்கியது. இந்த புதிய உத்தரவின் மூலம், ராணுவம் அதன் கடற்படையில் 3,300 ஸ்கார்பியோ யூனிட்ஸ்க்கு மேல் இருக்கும்.
ஸ்கார்பியோ க்ளாசிக் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
குறிப்பிடத்தக்க வகையில், புதிதாக வழங்கப்பட்ட ஸ்கார்பியோ க்ளாசிக் பழைய மஹிந்திரா லோகோவைப் பெருமைப்படுத்துகிறது. இது 128bhp பவரையும், 300Nm டோர்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் எஸ்யுவியை இயக்குகிறது. இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4WD சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆர்மி-ஸ்பெக் ஸ்கார்பியோ க்ளாசிக்கின் எக்ஸ்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
எக்ஸ்டீரியரில், ஆர்மி-ஸ்பெக் ஸ்கார்பியோ க்ளாசிக் புதிய ஆலிவ் க்ரீன் பெயிண்ட் மேட் ஃபினிஷ் உடன், சுற்றிலும் பிளாக் கிளாடிங், ரூஃப் ரெயில்ஸ், சைட் ஸ்டெப்ஸ் மற்றும் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஸ்கார்பியோ க்ளாசிக்கின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்ஸ், ஹைட் அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்லேம்ப்ஸ், ஃபோக் லைட்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்ஸ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் வாகனக் கடற்படை
இது தவிர, இந்திய ராணுவம் தற்போது டாடா சஃபாரி ஸ்டோர்ம், மாருதி சுஸுகி ஜிப்ஸி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகியவை அதன் சர்வீஸ் வாகன வரிசையில் உள்ளது. மேலும், மாருதி ஜிப்ஸியின் பழைய கடற்படைகளுக்குப் பதிலாக புதிய ஃபைவ்-டோர் மாருதி ஜிம்னியில் ராணுவம் ஆர்வம் காட்டியுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்