- 2026 இல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- இங்க்ளோ P1 ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்
சமீபத்தில், தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா நிறுவனம் தார் எலக்ட்ரிக் மாடலை காட்சிப்படுத்தியது. 2026 இல் விற்பனைக்கு வரும், எலக்ட்ரிக் தார் ஃபைவ்-டோர் இங்க்ளோ P1 ப்ளாட்ஃபார்மில் செய்யப்படும். இப்போது, வாகன உற்பத்தியாளர் தார்.இ’யின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மஹிந்திரா தார் இவி இன்டீரியர்
ஃபோட்டோஸில் காணப்பட்டத்தை போல, தார் இவிக்கு சென்ட்ரல் பிவோட்டிங் ஸ்கிரீன், ரோபஸ்ட் கிராப் ஹேண்டல்ஸ் மற்றும் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உடன் பெறலாம். கூடுதலாக,இதில் மல்டிஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் நடுவில் தார்.இ லோகோவை பெறுகின்றது. ஸ்கார்பியோ-என் போலவே இதன் சென்டர் கண்சொலிலும் ஆஃப்-ரோடர் கியர் லெவர் மற்றும் டெர்ரைன் டிரைவ் மோட்ஸையும் இது பெறும். இதன் கேபின் நகரபுறத்துக்கும் மற்றும் ஆஃப்-ரோடுக்கும் ஒரு சிறந்த கேபினாக இருக்கும்.
எலக்ட்ரிக் தார் விவரகுரிபுகள்
இந்த எலக்ட்ரிக் தாரின் விவரக்குறிப்புகள் இன்னும் வாகன உற்பத்தியாளரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 300மி.மீ வரையிலான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் 2,775மி.மீ முதல் 2,975மி.மீ வரை வீல்பேஸ் வழங்கும். இதில் 4WD சிஸ்டம் உடன் 60kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்