- தார் EV 2026 க்குள் லான்ச் செய்யப்படலாம்
- இது இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட 60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கலாம்
மஹிந்திரா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாரின் எலக்ட்ரிக் தார்.இ வெர்ஷனை காட்சிப்படுத்தியது. 2026 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு உற்பத்திக்கு அறிமுகமாகும் என்பதை மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.
படங்களில் காணப்படும் மஹிந்திரா தார்.இ இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் காட்டப்பட்ட கான்செப்ட் மாடல் ஆகும்.இது எல்இடி டிஆர்எல்’ஸ், த்ரீ-ஸ்லாட் இன்சர்ட் மற்றும் தார்.இ பேட்ஜிங் கொண்ட புதிய கிரில், முன் மற்றும் பின்புறத்தில் புதிய பம்ப்பர்ஸ், டூயல்-டோன் ஏரோ வீல்ஸ், சங்கி வீல் அர்செஸ் மற்றும் ஃபெண்டர்ஸ், பிளாக்-அவுட் டி-பில்லர் மற்றும் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யுவியின் இன்டீரியரில் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏரோப்ளேன் வடிவ கியர் லெவர், டிரைவ் மோட்ஸ்க்கான ரோட்டரி டயல் மற்றும் டச் கன்ட்ரோல்களுடன் கூடிய டூ-ஸ்போக் ஃப்ளாட்-பாட்டம் மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்கள் இருக்கும்.
மஹிந்திரா தார்.இ’க்கான பேட்டரி விவரங்களை வெளியிடவில்லை, ஆனால் இது பிராண்டின் இங்க்ளோ-P1 இவி கட்டமைப்பின் அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 4WD செயல்பாட்டுடன் இரண்டு அக்சளிலும் ஒரு மோட்டாருடன் 60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். மேலும், இந்த நிகழ்வில் மஹிந்திரா தனது எலக்ட்ரிக் எஸ்யுவிகளுக்கான புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்