- தார்.இ இங்க்ளோ ப்ளாட்ஃபார்மின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் அடிப்படையாகக் கொண்டது
- ஃபைவ் டோர் கொண்ட டிசைன் லுக்கில் காட்சிப்படுத்தப்பட்டது
மஹிந்திரா தார் எலக்ட்ரிக் வெளியிடப்பட்டது
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடந்த நிகழ்வில் மஹிந்திரா தனது தார் இவி கான்செப்ட்டை வெளியிட்டது. மாடல் அதன் ஐசிஇ பதிப்பில் இருந்து தார் இங்க்ளோ-P1 ப்ளாட்ஃபார்மின் அடிப்படையாகக் கொண்டது.
தார்.இ எக்ஸ்டீரியர் டிசைன்
இது முற்றிலும் பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டதாகும், கிரில்லில் 'Thar.e' பேட்ஜிங் போன்ற லோகோ, மூன்று செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் ஃப்ரண்ட் பம்பருக்கு கீழே உள்ள பேனல், ரவுண்டட் ஸ்கொயர் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஸ்கொயர் ட் வீல் அர்ச்செஸ், ஃபங்கி சைட் சில்ஸ், ஒரு பிளாக்-அவுட் ஏ-பில்லர், பாடி கலர் பி மற்றும் சி-பில்லர்ஸ், சி-பில்லரின் ரியரில் டோர் ஹேண்டல்ஸ், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், க்ரே கலர் டி-பில்லர் மற்றும் ரூஃபின் பின்புறம், ரியர் டோரில் பொருத்தப்பட்ட ஸ்பேர் டயர், ஸ்கொயர் எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் க்ரே கலர் ரியர் பம்பர். பிளாக் வீல் அர்ச்செஸ் மற்றும் முன் ஃபெண்டரில் ஒரு இன்சர்ட்ஸும் உள்ளது.
250-300 மி.மீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 640-680 மி.மீ ஃப்ரண்ட் ஓவர்ஹேங், 680-740 மி.மீ ரியர் ஓவர்ஹேங் மற்றும் 2,775 மி.மீ மற்றும் 2,975 மி.மீ வீல்பேஸ் உள்ளிட்ட ஆஃப்-ரோடு திறனுக்கு உதவும் வகையில் இந்த மாடல் திருத்தப்பட்ட பரிமாணங்களைப் பெறுகிறது.
புதிய தார் எலக்ட்ரிக் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
தார்.இ கான்செப்ட்டின் இன்டீரியர் அதன் ஐசிஇ உடன்பிறப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இரண்டாவது வரிசையில் இப்போது ஐசிஇ மாடலில் கேப்டன் சீட் வழங்குவதற்குப் பதிலாக பெஞ்ச் சீட் அமைப்பைப் பெறுகிறது, மேலும் ஃப்ரண்ட்டில் உள்ள சென்டர் கன்சோல், முன்பை விட இப்போது நெறைய இடத்தை அழிக்கிறது, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அதே சமயம் புதிய ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஒரு புதிய மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல்லை பெறுகிறது இதன் பூட் ஸ்பேஸ் தாராளமாக இருக்கும் என்று தெரிகிறது.
தார் இவி விவரக்குறிப்புகள் மற்றும் விலை
இது 60kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம், ஒவ்வொரு அக்சலில்லும் ஒரு மோட்டார் 4WD செயல்பாட்டை மேலும் செயல்படுத்துகிறது. இதன் விலையை இப்போதே கணிப்பது மிகவும் கடினம் என்றாலும், இந்திய மார்க்கெட்டில் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்