- இங்க்ளோ ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்
- 2025 ஆம் ஆண்டு மார்க்கெட்க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தாரின் எலக்ட்ரிக் வெர்ஷன் தார்.இ விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் அடிப்படையிலான பிக்கப் ட்ரக்கை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடும் என்று தெரியும். ஆனால், சமீபகாலமாக தார் எலக்ட்ரிக் கான்செப்ட்டை டீஸ் செய்து உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. இந்த பிராண்ட் இந்த சுதந்திர தினத்தில் அறிமுகப்படுத்தப்படும். டீசரில், ஐசிஇ தார் செங்குத்து டெயில் லேம்ப், வட்டமான-சதுர எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கிரில்லின் இடது பக்கத்தில் தார்.இ பேட்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது.
தார்.இ ஃபீச்சர்ஸ், இன்ஜின் மற்றும் டிசைன்
மஹிந்திரா பிஇ ரால்-இ போலவே, தார்.இ ஆனது 60kwh வரையிலான பேட்டரி பேக் மற்றும் 4WD திறனுக்காக இரண்டு அக்சலிலும் டூயல் மோட்டார்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய தார், லேடர் ஆன்-ஃப்ரேம் ப்ளாட்ஃபார்ம் அடிப்படையிலானது என்றாலும், இது தார் டாப்பைக் கொண்டிருக்கும், ஆனால் மஹிந்திராவின் இங்க்ளோ ஸ்கேட்போர்டு ப்ளாட்ஃபார்ம் மூலம் ஆதரிக்கப்படும். பரிச்சய உணர்வை வழங்க, தார்.இ தற்போதைய காரின் டிசைன் மற்றும் எக்ஸ்டீரியர் தொடர்ச்சி மற்றும் பரிச்சயத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். எக்ஸ்யுவிக்குப் பிறகு மஹிந்திராவின் ஸ்டேபில்ஸிலிருந்து எலக்ட்ரிக் செக்டர் நுழையும் இரண்டாவது பிராண்ட் ஸ்பின்-ஆஃப் இதுவாகும்.
தார் எலக்ட்ரிக் வெர்ஷன் எப்போது மார்க்கெட்டில் வரும்?
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சவுத் ஆஃப்ரிக்காவில் நடைபெறும் மஹிந்திராவின் உலகளாவிய நிகழ்வில் கார்வாலே கலந்து கொள்கிறார். இந்த இந்திய பிராண்ட் இந்த மாடலை 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறோம். ஹூண்டாய், கியா, மாருதி சுஸுகி, ஹோண்டா, எம்ஜி மற்றும் டாடா போன்ற பிராண்ட்ஸின் வாகனங்களுடன் மஹிந்திரா தார்.இ போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்