- இது 4WD மற்றும் RWD வெர்ஷன்ஸில் வழங்கப்படுகிறது
- BS6 ஃபேஸ் 2 இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸால் இயக்கப்படுகிறது
மஹிந்திரா 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நியூ ஜெனரேஷன் தாரை அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர் இது மக்கள் இடையே ஒரு பெரிய வெற்றியை பெற்றது. இந்த எஸ்யுவி 4WD மற்றும் RWD வேரியண்ட்ஸில் ஹார்ட்-டாப் மற்றும் சாஃப்ட்-டாப் போன்ற தேர்வுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆஃப்-ரோடரின் ஆரம்ப விலை ரூ.10.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-ஸ்பெக் வேரியண்ட் ரூ.16.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
சென்னையில் மஹிந்திரா தாரின் வெயிட்டிங் பீரியட்
சென்னை நகரத்தில் மஹிந்திரா தாரின் வேரியண்ட் வாரியான காத்திருப்பு காலம் பின்வருபவை:
வேரியண்ட் | வெயிட்டிங் பீரியட் |
RWD ஹார்ட் டாப் டீசல் | 30 முதல் 38 வாரங்கள் வரை |
RWD ஹார்ட் டாப் பெட்ரோல் | 8 முதல் 10 வாரங்கள் வரை |
4WD கன்வெர்ட்டிபிள் டாப் | 8 முதல் 10 வாரங்கள் வரை |
4WD ஹார்ட் டாப் டீசல் | 8 முதல் 10 வாரங்கள் வரை |
4WD ஹார்ட் டாப் பெட்ரோல் | 8 முதல் 10 வாரங்கள் வரை |
மஹிந்திரா தார் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
தார் 4WD உடன் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்ஸ் மற்றும் RWD 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்ஸுடன் கிடைக்கிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தாரின் ஜூன் 2023 இன் தள்ளுபடிகள்
ஜூன் 2023 இல், சில மஹிந்திரா டீலர்ஷிப்ஸில் ரூ.65,000 வரை தள்ளுபடி பெறுகின்றன. இந்த தள்ளுபடி கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி போன்ற வடிவில் கிடைக்கின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்