- தார் ஆர்டபிள்யூடி மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸில் வழங்கப்படுகின்றன
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மஹிந்திரா தார் எஸ்யுவியின் என்ட்ரி லெவல் ஆர்டபிள்யூடி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த டூ-டோர் தார் 4X4 தார் போலவே தெரிகிறது, ஆனால் '4X4' பேட்ஜிங் பெறுகிறது. இந்த என்ட்ரி லெவல் வெர்ஷனில் கூட 'ஆர்டபிள்யூடி' பேட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது, இது டீலர்ஷிப்ஸிடம் காணப்பட்டது.
மஹிந்திரா தார் ஆர்டபிள்யூடி ஸ்டைலிங் மற்றும் வண்ணங்கள்
ரியர் ஃபெண்டரில் உள்ள 'ஆர்டபிள்யூடி' பேட்ஜைத் தவிர, அதன் எக்ஸ்டீரியரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் ஃப்ளாட் போன்னெட், சதுரங்க வீல் அர்ச்செஸ், சர்குலர் வடிவ ஹெட்லேம்ப்ஸ் மற்றும் 16-இன்ச் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
மஹிந்திரா தார் ஆர்டபிள்யூடி இன்ஜின் விவரக்குறிப்புகள்
தார் ஆர்டபிள்யூடியில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 117bhp மற்றும் 300Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படும், இது 150bhp பவரை உற்பத்தி செய்கிறது. இதில் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் விருப்பத்தைப் பெறுகிறது.
தார் ஆர்டபிள்யூடி விலை
தார் ஆர்டபிள்யூடி’யின் விலை ரூ. 10.54 லட்சம் முதல் ரூ. 13.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்