- அக்டோபர் 3 முதல் அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கும்
- செப்டம்பர் 14 முதல் இந்த எஸ்யுவியை டெஸ்ட் டிரைவ் செய்யலாம்
மஹிந்திரா தனது ஃபைவ்-டோர் தார் ஐ ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு இந்த எஸ்யுவி இப்போது நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களை சென்றடைய தொடங்கியுள்ளது. பிராண்ட் தார் ராக்ஸை ரூ 12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஆர்வமுள்ள வாங்குபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள டீலரை விரைவில் தொடர்பு கொள்ளலாம். அக்டோபர் 3 முதல் வாடிக்கையாளர்கள் இந்த மஹிந்திரா எஸ்யுவிக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு செய்ய முடியும். அதேசமயம் அதை டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 14-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
மஹிந்திராவின் த்ரீ-டோர் தார் ஐ விட தார் ரோக்ஸில் பல புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் டாப்-வேரியன்ட்டில் பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ஏடாஸ் சூட், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பேனல், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் பிரீமியம் மியூசிக் சிஸ்டமும் இதில் உள்ளது.
இயந்திர ரீதியாக, பிராண்ட் தனது ஃபைவ்-டோர் எஸ்யுவி ஐ 2.0-லிட்டர் டீஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கியது. இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் கிடைக்கின்றன. தார் ராக்ஸின் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட்டின் விலை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, அதேசமயம் 4X4 வேரியன்ட்டின் விலை முன்பதிவு தொடங்கியவுடன் விலையை வெளியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்