- ஆகஸ்ட் 15, 2024 அன்று லான்சாகும்
- தார் ரோக்ஸ் தற்போதைய மாடலை விட அதிக புதுப்பிப்புகளைப் பெறும்
வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா ஆகஸ்ட் 15, 2024 அன்று இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபைவ்-டோர் தார் வெர்ஷனை அறிமுகப்படுத்தும். பல்வேறு டீஸர்கள் மூலம், ஃபைவ்-டோர் தார் வெர்ஷனின் பெயர் மற்றும் வெளிப்புற ஸ்டைலிங் விவரங்களை வெளிப்படுத்தியது. இதன் மூலம், ஃபைவ்-டோர் தார் வெர்ஷனின் பெயர் மஹிந்திரா தார் ரோக்ஸ் என மாறியுள்ளது. இப்போது விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த புதிய லைஃப்ஸ்டைல் எஸ்யுவி யாரும் எதிர்பார்க்காத முழுமையான தோற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பை ஷாட்ஸில் தனித்து நிற்கிறது எஸ்யுவியின் நீளம். தற்போதைய வெர்ஷனை விட நீளமாக இருந்தாலும், காரில் அதிக இடத்தை வழங்குவதற்காக வீல்பேஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற வடிவமைப்பு சிறப்பம்சங்களில் புதிய அலோய் வீல்ஸ், ஸ்குயர்-ஆஃப் அர்செஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் கொண்ட உயரமான பானட், ஏ-பில்லரில் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம் மற்றும் பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ் ஆகியவை அடங்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, வரவிருக்கும் தார் ரோக்ஸ் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புதிய ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360 டிகிரி கேமரா, ஒயிட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவற்றுடன் வரும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டைப் பொறுத்து, தார் ரோக்ஸ் இரண்டு வகையான சன்ரூஃப்களுடன் வழங்கப்படுகிறது, சிங்கிள்-பேன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப்.
இயந்திர ரீதியாக, ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் ரோக்ஸ் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் விருப்பங்களுடன் இணைக்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்டதும், தார் ரோக்ஸ் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா போன்ற ஆஃப்-ரோடிங் லைஃப்ஸ்டைல் எஸ்யுவி கார்களுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்