- ஆகஸ்ட் 15, 2024 அன்று லான்ச் ஆகும்
- XUV700 மற்றும் ஸ்கார்பியோ என் இலிருந்து சில அம்சங்களை பெறும்
மஹிந்திரா தார் ரோக்ஸ் எஸ்யுவியின் மற்றொரு டீசரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய டீஸ்ரில் பனோரமிக் சன்ரூஃப் சேர்ப்பதை வாகன உற்பத்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், தார் ரோக்ஸ் அதன் செக்மெண்ட்டில் சன்ரூஃப் பெறும் முதல் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடராக மாறும்.
டீசரை கூர்ந்து பார்த்தால் த்ரீ-டோர் தாரில் பிளாக் நிறத்திற்கு மாறாக ஒயிட் சீட்ஸ் போன்ற கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துகிறது. மேலும், அனைத்து ஹெட்ரெஸ்ட்களும் சரிசெய்யக்கூடியதாகத் தெரிகிறது மற்றும் டாஷ்போர்டின் மேல் ஒரு பெரிய ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், தார் ரோக்ஸ் வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்களைப் பெறும்.
இது தவிர, புதிய தார் XUV700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகியவற்றிலிருந்து ஏராளமான அம்சங்களை பெறுகின்றன. இதில் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேன்ல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் லெவல் 2 ஏடாஸ் சூட் ஆகியவை அடங்கும்.
ஃபைவ்-டோர் தார் ரோக்ஸில் 2.0-லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின்களுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்