- ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் இதில் கிடைக்கும்
- பனோரமிக் சன்ரூஃப் அதன் டாப் வரியண்ட்ஸில் கிடைக்கும்
மஹிந்திரா தார் ரோக்ஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய லைஃப்ஸ்டைல் எஸ்யுவியின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த மாடலின் மற்றொரு டீசரை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. இந்த புதிய டீசரில், வரவிருக்கும் ஃபைவ்-டோர் தாரின் இன்டீரியர் மற்றும் அம்சங்கள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் பார்ப்பது போல், தார் ரோக்ஸில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். இந்த இரண்டு அம்சங்களும் பிராண்டின் முதன்மை தயாரிப்பு XUV700 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, தார் ரோக்ஸின் டாப் வேரியன்ட்டில் ஒரு பனோரமிக் சன்ரூஃப், டாஷ்போர்டில் சாஃப்ட்-டச் ஃபினிஷ் மற்றும் காண்ட்ராஸ்ட் தையல் மற்றும் ஹர்மன் கார்டன் ம்யூசிக் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
சிறப்பு என்னவென்றால், பிளாக் நிற சீட் அப்ஹோல்ஸ்டரி போலல்லாமல், தார் ரோக்ஸ் கூல்ட் ஃப்ரண்ட் சீட்ஸுடன் ஒயிட் சீட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறும். இதற்கிடையில், தார் ரோக்ஸுடன் வழங்கப்படும் மற்ற அம்சங்களில் பவர்ட் டிரைவர் சீட், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை அடங்கும்.
லான்ச் ஆனதும், தார் ரோக்ஸ் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடு எஸ்யுவி பிரிவில் ஃபைவ்-டோர் ஃபோர்ஸ் கூர்கா மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு கடுமையான போட்டியாக இது இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்