- இந்தியாவில் தார் ரோக்ஸ் விலை ரூ. 12.99 லட்சத்தில் தொடங்குகிறது
- மஹிந்திரா தார் ரோக்ஸின் வேரியன்ட் வாரியான விலைகளை சமீபத்தில் அறிவித்துள்ளது
நேற்று, மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸை அறிமுகப்படுத்தியது மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சற்று முன்னதாகவே தொடங்கியது. மஹிந்திரா தார் ரோக்ஸ் பேஸ் வேரியன்ட்டின் விலைகளை நேற்று அறிவித்தது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்கியது. அறிமுகத்தின் போது விலைகளை அறிவித்தது தவிர, மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1 இன் பேஸ் வேரியன்ட்டில் வழங்கப்படும் முக்கிய அம்சங்களின் விவரங்களையும் வெளியிட்டது. அவற்றின் விவரம் பின்வருபவை.
முதலில் 2024 தார் ரோக்ஸின் எக்ஸ்டீரியரைப் பற்றி பேசுகையில், காரின் எக்ஸ்டீரியரில் டூயல்-டோன் மெட்டல் டாப், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் 18-இன்ச் ஸ்டீல் வீல்ஸுடன் கண்ணைக் கவரும். இன்டீரியரைப் பார்த்தால், இந்த எஸ்யுவி ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ரியர் ஏசி வென்ட்ஸ், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட்ஸ், உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட், இஎஸ்சி, பிரேக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி போன்ற அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தார் ரோக்ஸின் முழு வேரியன்ட்ஸ்-வரிசையும் 6 ஏர்பேக்குகளைப் பெறுகிறது. அதாவது, காரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் ரோக்ஸின் என்ட்ரி-லெவல் MX1 பேஸ் வேரியன்ட் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதில் 2.0-லிட்டர், ஃபோர்-சிலிண்டர், எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் 160bhp மற்றும் 330Nm டோர்க் மற்றும் 2.2-லிட்டர், ஃபோர்-சிலிண்டர், எம்ஹாவ்க் டீசல் எஞ்சின் 150bhp மற்றும் 330Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டாண்டர்டாக வந்தாலும், இந்த வேரியன்ட் 4x2 வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்