- பேஸ் வேரியன்ட்ஸின் விலையை மட்டுமே மஹிந்திரா அறிவித்தது
- 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்
மஹிந்திரா இறுதியாக தார் ஃபைவ்-டோர் என்றும் அழைக்கப்படும் தார் ரோக்ஸை இந்தியாவில் ரூ. 12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது. இது 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்.
தார் ரோக்ஸ் எக்ஸ்டீரியர்
எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, புதிய தார் எக்ஸ்டென்டெட் வீல்பேஸ், பில்லாரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், புதிய ஸ்லாட் கிரில், 360 டிகிரி கேமரா மற்றும் வட்ட வடிவ டிஆர்எல்கள் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் கூடிய திருத்தப்பட்ட ஃப்ரண்ட் ஃபேஷியாவை பெறும்.
தார் ரோக்ஸ் இன்டீரியர்
புதிய தார் ரோக்ஸின் உள்ளே, பலவிதமான அம்சங்களை நீங்கள் பார்க்கலாம். அதில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட், ஃபுல் டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.
தார் ரோக்ஸ் இன்ஜின்
இன்ஜின் விருப்பங்களைப் பொறுத்தவரை, தார் ரோக்ஸ் 2.0 லிட்டர், ஃபோர்-சிலிண்டர், எம்ஸ்டாலியன் உடன் டர்போ-பெட்ரோல் இன்ஜினில் வருகிறது. இது 1160bhp மற்றும் 330Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் 2.2-லிட்டர், ஃபோர்-சிலிண்டர், எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் மூலம் 150bhp மற்றும் 330Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. வாடிக்கையாளர்கள் இதை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் தேர்வு செய்யலாம்.
தார் ரோக்ஸின் போட்டியாளர்
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்றவற்றுக்கு எதிராக தார் ரோக்ஸ் போட்டியிடும்.
தார் ரோக்ஸின் விலை
மஹிந்திரா இன்று அறிவித்த தார் ரோக்ஸ் பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருபவை:
பேஸ் வேரியன்ட் | எக்ஸ் ஷோரூம் விலைகள் |
மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1 பெட்ரோல் எம்டீ | ரூ. 12.99 லட்சம் |
மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1 டீசல் எம்டீ | ரூ. 13.99 லட்சம் |