- ஒயிட் அப்ஹோல்ஸ்டரி, பெரிய டச்ஸ்கிரீன், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் பல கிடைக்கும்
- இதில் சிங்கிள் மற்றும் டூயல் பேன் சன்ரூஃப் இருக்கும்
மஹிந்திரா நிறுவனம் தனது ஆஃப்-ரோடிங் மாடலான தாரின் புதிய அவதாரத்தை இந்திய கார் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது, இதை நிறுவனம் ரோக்ஸ் என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்த உள்ளது. ஆஃப்-ரோடிங் மக்களும் தார் ரோக்ஸ்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஃபைவ்-டோர் கொண்ட இந்த காரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் ஆஃபிஷியல் லான்ச்க்கு முன், மஹிந்திரா இந்த எஸ்யுவியின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது, அதில் அதன் கவர்ச்சிகரமான இன்டீரியர் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் கேபினில் காணப்படும் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
இந்தப் புதிய டீசரில் காணப்பட்ட படங்களைப் பார்த்தால், முதலில் நம் கண்ணில் படுவது XUV700 போன்ற தார் ரோக்ஸின் கேபினில் உள்ள புதிய ஒயிட் நிற அப்ஹோல்ஸ்டரி தான். இதனுடன், ஃப்ரண்ட் சீட்ஸ்க்கு வென்டிலேஷன் ஃபங்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆஃப்-ரோடிங் கார்களில் இதுபோன்ற ஒயிட் நிற சீட் அப்ஹோல்ஸ்டரி வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு சற்று சிக்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெஜ்ழலெஸ் ஆர்விஎம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புதிய ஸ்டீயரிங், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் இது லோயர் வேரியன்ட் என்பதால் சிங்கிள் பேன் சன்ரூஃப் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களுடன் தார் ராக்ஸின் கேபின் பொருத்தப்பட்டிருக்கும். இருப்பினும், சன்ரூஃப் விருப்பம் வேரியன்ட்டைப் பொறுத்து மாறுபடலாம். ஏனெனில் தார் ரோக்ஸின் பழைய டீசரில் பனோரமிக் சன்ரூஃப் காணப்பட்டது.
இது தவிர, இது அனைத்து பயணிகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் விருப்பத்தைக் கொண்டிருக்கும். மேலும், ஸ்பிளிட் ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஆர்ம்ரெஸ்ட், த்ரீ-பாயின்ட் சீட்பெல்ட் மற்றும் ரூஃப் மவுண்டட் ரியர் ஸ்பீக்கர் ஆகியவை கிடைக்கும். அதே சமயம், அதில் காணப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் தற்போதைய தார் மாதிரியாக இருக்கும், இது லோயர் ஸ்பெக் வேரியன்ட் என்பதால்.
இயந்திர ரீதியாக, தார் ரோக்ஸ் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படலாம். இருப்பினும், தார் புதிய வேரியன்ட் ஆர்டபிள்யூடி வெர்ஷனில் வழங்கப்படுமா இல்லையா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. தார் ரோக்ஸின் அறிமுகத்திற்குப் பிறகு, ஏற்கனவே சந்தையில் இருக்கும் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகியவற்றுக்கு கடுமையான போட்டியை இது விளைவிக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்