- ஃபைவ்-டோர் தார், இப்போது தார் ரோக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது
- பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சில நாட்களுக்கு முன்பு, மஹிந்திரா தார் ரோக்ஸ் என்ற ஃபைவ்-டோர் தார் ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்படும் மற்றும் விரைவில் டெலிவரியும் தொடங்கலாம்.
மஹிந்திரா தார் ரோக்ஸின் புதிய எக்ஸ்டீரியர் டிசைனையும் காட்டியது. இந்த எஸ்யுவி கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
தார் ரோக்ஸின் புதிய ஃப்ரண்ட் டிசைன் த்ரீ-டோர் தாரிலிருந்து வேறுபட்டது. புதிய கிரில், வட்டமான எல்இடி லைட்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், சர்க்குலர் ஃபாக் லைட்ஸ் மற்றும் சற்று திருத்தப்பட்ட பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடவே கிரில்லில் ஃப்ரண்ட் கேமராவும் உள்ளது.
ஃபெண்டர்ஸில் டர்ன் இண்டிகேட்டர்ஸ், டோரின் ஓஆர்விஎம்களில் 'தார்' எழுதுக்கள், பெரிய வீல் கிளாடிங் மற்றும் சைட் ஸ்டெப்ஸ் உட்பட சில ரெட்ரோ அம்சங்களும் உள்ளன. இது தவிர, சைடில் சிக்னேச்சர் 4x4 பேட்ஜிங், புதிய அலோய் வீல்ஸ், பெரிய வீல்பேஸ், சி-பில்லரில் பாடி-கலர் ரியர் டோர் ஹேண்டல்ஸ்மற்றும் ரியரில் புதிய எல்இடி டெயில்லைட்ஸ் போன்ற சில புதிய அம்சங்களும் உள்ளன.
இன்டீரியர் டிசைன் மற்றும் முழு அம்சங்களின் பட்டியல் மஹிந்திராவால் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இதில் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஏடாஸ், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பெரிய டச்ஸ்கிரீன் உடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே போன்ற அம்சங்கள் இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்