- இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது
- விலை ரூ. 12.99 லட்சத்தில் ஆரம்பம்
சமீபத்தில் மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸை ரூ. 12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆஃப்-ரோடர் கார் என்பதால் தார் ரோக்ஸ்ஸின் மைலேஜ் என்பது அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாகும். இப்போது, தார் ரோக்ஸின் ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜை நாங்கள் பெற்றுள்ளோம்.
புதிய தார் ரோக்ஸ் 2.2 லிட்டர் டீஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மைலேஜ் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, பெட்ரோல் மோட்டர் லிட்டருக்கு 12.40கிமீ ஐ வழங்கும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 15.20 கிமீ மைலேஜை வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்க. கூடுதலாக, டீசல் ஆட்டோமேட்டிக் வெர்ஷனின் நிஜமான மைலேஜ் சோதனையை 4x2 வெர்ஷனில் செய்தோம்.
எங்கள் சோதனையில், தார் ரோக்ஸ் சிட்டி மற்றும் ஹைவேயில் முறையே 10.82 கிமீ மற்றும் 15.44 கிமீ மைலேஜை வழங்கியது. ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் லிட்டருக்கு 11.97 கிமீ மைலேஜ் வந்தன, இது உரிமைகோரப்படுவதை ஒப்பிடும்போது டீசண்டாக இருக்கின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்