- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 10.98 லட்சம் எக்ஸ்-ஷோரூம்
- ஆர்டபிள்யூடி மற்றும் 4WD கட்டமைப்புகளில் வழங்கப்படும்
மஹிந்திராவின் லைஃப்ஸ்டைல் ஆஃப்ரோடரான தார், செப்டம்பர் 2023 இல் பிராண்டின் மூன்றாவது அதிக விற்பனையான மாடலாக இருந்தது. முந்தைய மாதத்தில் மொத்தம் 5,413 த்ரீ-டோர் கொண்ட எஸ்யுவிஸ் விற்பனை செய்யப்பட்டன. ஒப்பிடுகையில், வாகன உற்பத்தியாளர் கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,249 யூனிட்ஸை விற்பனை செய்தது, எனவே இது ஒரு ஒரு ஆண்டிற்க்கு 27.39 சதவீதத் வளர்ச்சியை எட்டியுள்ளது.
தற்போது, தார் இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது, AX (O) மற்றும் LX, சாஃப்ட் மற்றும் ஹார்ட் ரூஃப்-டாப் தேர்வுகள். மேலும், வாடிக்கையாளர்கள் ரியர்-வீல் மற்றும் ஃபோர்-வீல் டிரைவ் கட்டமைப்புகளில் இருந்து மாடலை தேர்வு செய்யலாம்.
4WD தார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினில் வழங்கப்படுகிறது. முந்தையது 150bhp மற்றும் 300Nm டோர்க் கொண்ட 2.0 லிட்டர் ஃபோர்-சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த டோர்க் ஆட்டோமேட்டிக் பதிப்பில் 20Nm அதிகரிக்கும். மறுபுறம், ஆயில் பர்னர் 2.2-லிட்டர் எம்ஹாவ்க் இன்ஜினைப் பெறுகிறது, இது 130bhp மற்றும் 300Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இது ஆர்டபிள்யூடி கட்டமைப்பிலும் இருக்கலாம். ஆர்டபிள்யூடி தார் ஆனது 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினில் இருக்கலாம். முந்தைய பவர் அவுட்புட் 4WD வெர்ஷனை போலவே இருக்கும் போது, பிந்தையது 117bhp மற்றும் 300Nm டோர்க்கிற்கு டியூன் செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, டீசல் வேரியண்ட் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பெட்ரோலில் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்