- ஏற்கனவே இந்த கலர் ஸ்கார்பியோ என் இல் உள்ளது
- இப்போது இது மொத்தம் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
மஹிந்திரா தனது மிகவும் பிரபலமான எஸ்யுவி ஒன்றை இந்திய சந்தையில் மற்றொரு புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் இப்போது ஐந்து வண்ண விருப்பங்களிலும், 'டீப் ஃபாரஸ்ட்' என்ற புதிய நிறத்திலும் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா தார் இப்போது ரெட் ரேஜ், டீப் க்ரே, எவரெஸ்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக், டெசர்ட் ஃப்யுரி மற்றும் டீப் ஃபார்ஸ்ட் ஆகிய ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த வண்ண விருப்பங்களில், தார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பிந்தைய மூன்று வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை முற்றிலும் புதியவை.
தார் RWD மற்றும் 4WD வேரியன்ட்டில் மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இது 1.5-லிட்டர் டீசல், 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் மற்றும் இந்த இன்ஜின்கள் முறையே 117bhp/300Nm, 150bhp/300Nm மற்றும் 130bhp/300Nm டோர்க் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்த இன்ஜின்கள் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கார் தயாரிப்பு நிறுவனம் தாரின் விலையை ரூ. 10,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, இப்போது இந்த எஸ்யுவியின் விலை ரூ. 11.35 லட்சம் முதல் ரூ. 17.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்கப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்