- அடுத்த ஆண்டு ஃபைவ்-டோர் தாரின் விலை அறிவிக்கப்படும்
- இது சன் ரூஃப் உடன் வரும்.
நியூ மஹிந்திரா தார் ஃபைவ்-டோர் வெளியீடு மற்றும் லான்ச் டைம்லைன்
மஹிந்திரா நிறுவனம் 2024 முதல் காலாண்டில் ஃபைவ்-டோர் தார் காரை நாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பல ஸ்பை ஷாட்ஸில் மற்றும் விரிவான சாலை டெஸ்டிங்க்ஸ்க்குப் பிறகு, கார் தயாரிப்பாளர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காரின் ப்ரொடக்ஷன்-ரெடி வெர்ஷனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைவ்-டோர் தாரின் புதிய ஷாட்ஸில் என்ன வெளிப்படுத்துகிறது?
தாரின் த்ரீ-டோர் மாடலுடன் ஒப்பிடுகையில், ஃபைவ்-டோரில் பெரிய ஸ்கிரீனை, படங்களில் காணலாம். ஃபைவ்-டோர் ஆனது 10-இன்ச் யூனிட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், மேலும் த்ரீ-டோர் இல் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமுடன் வழங்கப்படுகிறது.
பெரிய ஸ்கிரீனைத் தவிர, சமீபத்திய மஹிந்திரா எஸ்யுவி சன்ரூஃப், ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங், ரவுண்டட் ஏசி வென்ட்ஸ், ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்ஸ், ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட், 50:50 ஸ்ப்ளிட் ஃபங்ஷன் கொண்ட இரண்டாவது வரிசையில் பெஞ்ச் சீட் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மற்றும் சுற்றிலும் அட்ஜஸ்ட்டெபல் ஹெட்ரெஸ்ட்ஸ் போன்ற ஃபிச்சர்ஸும் உண்டு.
2024 தார் ஃபைவ்-டோர் எக்ஸ்டீரியர் டிசைன்
வெளிப்புறமாக, புதிய தார், ஃபைவ்-டோரில், சர்குலர் ஹெட்லேம்ப்ஸ், சிக்னேச்சர் செவன்-ஸ்லாட் கிரில், ஃபோக் லைட்ஸ் மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட டெயில்லைட்ஸ், டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் உடன் வழங்கப்பட உள்ளது.
வரவிருக்கும் ஃபைவ்-டோர் தார் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
2024 ஃபைவ்-டோர் கொண்ட மஹிந்திரா தார் 2.0-லிட்டர், எம்ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படலாம், இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இனைக்கப்பட்டுருக்கலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்