- இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 15.40 லட்சத்தில் இருந்து ஆரம்பம்
- இந்த ஸ்பெஷல் எடிஷன் தார் டெசர்டால் ஈர்க்கப்பட்டது
மஹிந்திரா & மஹிந்திரா தனது பிரபலமான ஆஃப்-ரோடர் தார் எர்த் எடிஷனை இந்தியாவில் பிப்ரவரி 27 அன்று ரூ. 15.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. புதிய தார் எர்த் எடிஷன் LX ஹார்ட்-டாப் வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது, இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இந்த கட்டுரையில் அதன் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுவோம்.
தார் எர்த் எடிஷனின் எக்ஸ்டீரியர் பற்றிய முக்கிய அம்சங்கள்
இந்த ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்டீரியரில் புதிய மேட் வண்ணம் பூசப்பட்டுள்ளது, இதற்கு டெசர்ட் ப்யூரி என்று பெயரிடப்பட்டுள்ளது. பி-பில்லர்கள் மற்றும் ரியர் ஃபெண்டர்களிலும் எர்த் எடிஷன் பேட்ஜிங் கிடைக்கிறது. இது தவிர, டூன் டெசர்ட் இன்ஸ்பைர்டு டிகல்ஸ் மற்றும் கிராபிக்ஸ் டோர் மற்றும் ரியர் ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளது. சில்வர் ஃபினிஷ் அலோய் வீல்ஸ் மற்றும் ஸ்குயர் வடிவ 3D'எர்த் எடிஷன்' பேட்ஜிங் ஆகியவை இதை மேலும் சிறப்பு படுத்துகிறது.
மஹிந்திரா தார் எர்த் எடிஷன் இன்டீரியர்
தார் எர்த் எடிஷனில் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் கேபினை கொஞ்சம் ப்ரீமியமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தார் எர்த் டெசர்ட் தீம்மில் அடிப்படையாகக் கொண்டது என்றும், டோர்மேட் டெசர்ட் ஃப்யூரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் கூறுகிறது. டூயல் டோன் ஏசி வென்ட்ஸ், பியானோ பிளாக் நிறத்தில் எச்விஏசி ஹவுசிங், எண் 1ல் தொடங்கும் அலங்கார விஐஎன் நம்பர் பிளேட், ஸ்டீயரிங் வீலில் டார்க் குரோம் ட்வின் பீக் லோகோ, கப் ஹோல்டர்களில் டார்க் குரோம் இன்சர்ட்ஸ், கியர் நாப் மற்றும் சென்டர் கியர் கன்சோல் ஆகியவற்றைப் பெறுகிறது. இது தவிர, பெரும்பாலான கேபின் அம்சங்கள் வழக்கமான எல்எக்ஸ் மாறுபாடு போலவே பிரீமியமாக தோற்றமளிக்கும்.
இந்த புதிய எக்ஸ்டீரியர் வண்ணம் தவிர, தார் 4WD ஆனது ரெட் ரேஜ், கேலக்ஸி க்ரே, நாபோலி பிளாக் மற்றும் எவரெஸ்ட் ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஆர்ம்ரெஸ்ட், 7D ஃபுளோர் மேட் மற்றும் கம்ஃபர்ட் கிட் போன்ற பாகங்களையும் தேர்வு செய்யலாம்.
இன்ஜின்
மஹிந்திரா தார் எர்த் எடிஷன் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய எடிஷன் ஆஃப்-ரோடரின் 4WD வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்