- நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- தார் எர்த் எடிஷனின் ஆரம்ப விலை ரூ. 15.40 லட்சம்
மஹிந்திரா கடந்த வாரம் தார் ஸ்பெஷல் எடிஷனை ரூ. 15.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த வெர்ஷன் தார் எர்த் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது, இது இப்போது நாட்டில் உள்ள அனைத்து உள்ளூர் டீலர்ஷிப்களையும் சென்றடையத் தொடங்கியுள்ளது.
படங்களில் காணப்படுவது போல, புதிய தார் எர்த் எடிஷன் ஸ்பெஷல் டெசர்ட் ப்யூரி மேட் நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் தாரிலிருந்து வேறுபடுத்துவதற்கு, இதில் சில புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பி-பில்லர்களில் எர்த் எடிஷன் பேட்ஜிங், சுற்றிலும் மேட் பிளாக் பேட்ஜிங் மற்றும் டோரில் டூன்-இன்ஸ்பைர்டு ஸ்டிக்கர் ஆகியவை அடங்கும்.
மஹிந்திரா தார் எர்த் எடிஷனின் இன்டீரியரில் லைட் பெய்ஜ் மற்றும் பிளாக் டூயல்-டோன் தீம், டார்க் குரோம் இன்சர்ட்ஸ், டோரில் தார் பிராண்டிங், ஹெட்ரெஸ்ட்களில் டூன் டிசைன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எலிமென்ட்ஸில் டெசர்ட் ஃப்யூரி தீம் இன்சர்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுகின்றன. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தனித்துவமான விஐஎன் பிளேட்ஸ் வழங்கப்படும்.
இந்த தார் வெர்ஷனில், கம்ஃபர்ட் கிட் ஆனா, ஃபுளோர் மேட்ஸ் மற்றும் ஆர்ம்ரெஸ்ட் போன்ற ஆக்சஸரீஸ் வழங்கப்படுகின்றன. இதன் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்