- பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இது கூர்கா ஃபைவ்-டோர்க்கு போட்டியாக இருக்கும்
மஹிந்திரா இன்று தார் ஃபைவ்-டோர் ஐ அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தி அதற்கு தார் ரோக்ஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த லைஃப்ஸ்டைல் எஸ்யுவியின் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் லான்ச் ஆகும் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஃபைவ்-டோர் உடன் போட்டியிடும்.
டிசைனில், புதிய தார் ரோக்ஸ் வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்’ஸ், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், சர்க்குலர் ஃபாக் லைட்ஸ், ஒரு புதிய மல்டி-ஸ்லேட் கிரில் மற்றும் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம் ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும், இது டூயல்-டோன் அலோய் வீல்ஸ், பிளாக் ஃப்ரண்ட் டோர் ஹேண்டல்ஸ், ஃப்ரண்ட் கேமரா, சி-பில்லரில் பொருத்தப்பட்ட பாடி கலர்ட் ரியர் டோர் ஹேண்டல்ஸ், சதுர எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
மஹிந்திரா 2024 தார் ரோக்ஸின் இன்டீரியரை வெளியிடவில்லை என்றாலும், இது ஒரு பனோரமிக் சன்ரூஃப் (மிட்-ஸ்பெக் வேரியன்ட்க்கு சிங்கிள்-பேன் யூனிட்), பெரிய டச்ஸ்கிரீன் யூனிட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏடாஸ், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பல அம்சங்களை கொண்டிருக்கும்.
தார் ரோக்ஸ் 2.0-லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஃபோர்ஸ் கூர்கா ஃபைவ்-டோர் போன்ற பாரம்பரிய போட்டியாளர்களைத் தவிர, இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுக்கு எதிராகவும் தார் ரோக்ஸ் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்