- நாபோலி பிளாக் எக்ஸ்டீரியர் பெயிண்ட் நிறுத்தப்பட்டது
- புதிய பெயிண்ட் ஸ்கீமான ஸ்டெல்த் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது
மஹிந்திரா அதன் இரண்டு பிரபலமான எஸ்யுவிகளான தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஆகியவற்றின் எக்ஸ்டீரியரில் ஒரு புதிய வண்ணத்கை அமைதியாக அறிமுகம் செய்தது. இரண்டு எஸ்யுவிகளும் இப்போது பிராண்டின் சிக்னேச்சர் கலரான நாபோலி பிளாக் எக்ஸ்டீரியர் சாயலுக்குப் பதிலாக ஸ்டெல்த் பிளாக் என்ற புதிய வண்ணத்தை பெறுகின்றன. தற்போது, தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் முறையே ஐந்து மற்றும் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
இரண்டு எஸ்யுவிகளும் இப்போது ஒரு ஸ்டெல்த் பிளாக் எக்ஸ்டீரியர் நிறத்தைப் பெறுகின்றன, இது அவற்றின் வரிசைக்கு புதியது. ஸ்கார்பியோ என், XUV700, XUV300 மற்றும் பொலேரோ நியோ உள்ளிட்ட இந்திய வாகன உற்பத்தியாளரின் பெரும்பாலான எஸ்யுவிகள் நாபோலி பிளாக் பெயிண்ட் கொண்டுள்ளது. காட்சி வேறுபாடுகள் ஏதும் இல்லாததால், வாகன உற்பத்தியாளர் நாபோலி பிளாக் என்பதை ஸ்டெல்த் பிளாக் எனப் பெயர்மாற்றியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
மற்ற செய்திகளில், இந்திய யுவி தயாரிப்பாளர் XUV300க்கான ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார், ஏனெனில் இது விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்தில் கிடைக்கபட்ட ஸ்பை படங்களில் பல முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்