- தார் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்ட்ரெயின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
- 4x4 மற்றும் 4x2 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது.
அக்டோபர் 2020 யில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய தார் மஹிந்திராவுக்கு ஒரு அமோகமாக விற்பனையாகி வருகிறது. அதற்க்கு பதிலாக, லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் 2.5 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் யூனிட்ஸின் உற்பத்தியின் எல்லையே எட்டியுள்ளது. இந்த எஸ்யுவி 4*4 மற்றும் ஆர்டபிள்யூடி ஆகிய இரண்டு வேரியண்ட்ஸ் ஹார்ட் டாப் மற்றும் சாஃப்ட் டாப்புக்கான ஆப்ஷனில் வழங்கப்படுகிறது.
தார் தொடங்கி சில வாரத்தில் தனது 15,000 புக்கிங்ஸ்சையும் மற்றும் 12 மாதத்தில் 75,000 புக்கிங்ஸ்சையும் பதிவுசெய்யபட்டுள்ளது. இச்சமையதில் இந்த எஸ்யுவியின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்ஸ்க்கு 4 மாதம் காத்திருப்பு காலமாகும்.
இந்த நிகழ்வில் தனது கருத்தை தெரிவித்த M&M Ltd. யின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கூறுவது என்னவென்றால், மஹிந்திரா தார் 100,000 யூனிட்ஸ் என்ற இந்த குறிப்பிடத்தக்க எலக்கை எட்டுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு உண்மையான அட்வென்ச்சர் ஆஃப்-ரோடு எஸ்யுவியாக இருக்கும்.
மஹிந்திரா தாரில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் இன்ஜின்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இது 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 150bhp பவர் மற்றும் 300Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்ஸ் கிடைக்கும். 1.5 லிட்டர் மோட்டார் 117bhp பவரையும், 300Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 130bhp பவரையும், 300Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது சிக்ஸ் ஸ்பீட் டோர்க் கண்வர்டர் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் மோட்டார் 4X2 வேரியண்ட் உடன் மட்டுமே கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய இமிஷன் விதிமுறைகளான BS6 2க்கு இணங்க தார் விரைவில் தயாரிக்கப்படும். இதன் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு மிகக் குறைவு.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்