- மஹிந்திரா தனது XUV.e8 அடுத்த ஆண்டிற்குள் லான்ச் செய்ய படும்
- 2026 அக்டோபர்குள் ஐந்து இவிஸை லான்ச் செய்ய திட்டமிட்டுள்ளது
அடுத்த மூன்று வருடத்தில் மஹிந்திராவின் திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து புதிய எலக்ட்ரிக் எஸ்யுவி’ஸை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா அறிவித்துள்ளது. இதில் XUV.e8, XUV.e9, BE.05, BE ரால்-இ மற்றும் BE.07 போன்ற மாடல்ஸும் இதில் அடங்கும். இது அடுத்த ஆண்டு டிசம்பரில் BE.07 ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
மஹிந்திராவின் டீஸ்ர் வீடியோவில் என்ன தெரிய வந்துள்ளது?
டீசரில் காணப்படுவது போல், மஹிந்திரா தனது XUV.e9, BE.05 மற்றும் XUV.e8 ஆகிய மாடல்ஸை சென்னையில் டெஸ்ட் செய்து வருகிறது. ஃப்ளஷ் டோர் ஹேண்டல்ஸ், L-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் ஸ்பீடோ மீட்டரில் 200 கி.மீ வேகத்தில் செல்லும் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற சில முக்கிய விவரங்களை இது வெளிப்படுத்துகிறது! BE.05 மற்றும் XUV.e9 ஆகியவற்றின் பின்புறத்தில் எல்இடி லைட் பார் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
மஹிந்திராவின் வரவிருக்கும் மற்ற கார்ஸின் விவரங்கள்
சமீபத்தில் மஹிந்திரா தனது எலக்ட்ரிக் தார் மற்றும் ஸ்கார்பியோ அடிப்படையிலான பிக்-அப்பின் எலக்ட்ரிஃபைட் எடிஷனை காட்சிப்படுத்தியது. அதே நேரத்தில், பிராண்ட் ஐசிஇ மாடலான ஃபைவ்-டோர் தார் மற்றும் XUV300 ஐ டெஸ்ட்டிங் செய்து வருகிறது, இது பின்னர் பிஇ மற்றும் இவிஸின் வடிவமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்