- ஸ்கார்பியோ -என் அடிப்படையில் இருக்கலாம்
- மஹிந்திராவின் உலகளாவிய தயாரிப்பாக இருக்கும்
ஆகஸ்ட் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பிராண்டின் வருடாந்திர நிகழ்வுக்கு முன்னதாக, ஆட்டோமேக்கர் அதன் வரவிருக்கும் புதிய கான்செப்ட்டின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. 'க்ளோபல் பிக் அப் விஷன்' என பெயரிடப்பட்ட, டீஸர் வீடியோ, பிக்-அப் ட்ரக் கான்செப்ட் போல் தோன்றுவதைக் காட்டுகிறது.
மஹிந்திரா பிக்-அப் ட்ரக் கான்செப்ட் - அது என்ன?
வீடியோவில் காணப்படுவது போல், பெரிய சங்கி டயர்ஸ், ஒரு சைட் ஃபுட்ஸ்டெப் மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட டெயில் லேம்ப்ஸுடன் இந்த கான்செப்ட்டை காணலாம். உன்னிப்பாகக் கவனித்த பிறகு, ஒரு எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஓபன் ஃப்ளாட் பெட்டையும் காணலாம். இதை தவிர, வீடியோவில் வெளிப்படும் உள்துறை விவரங்கள் எதுவும் இல்லை.
பிக்-அப் டிரக் செக்மென்ட்டில் இந்தியாவில் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும் இசுஸு வி-கிராஸ் மட்டுமே ஒரே விருப்பமாகும். தற்போது, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஆனது மாற்றப்படுவதற்கும், பிக்-அப் ட்ர்க்காக வழங்கப்படுவதற்கும் ஒரே சாத்தியமான விருப்பமாகத் தெரிகிறது.
லான்ச் டைம்லைன்
இந்த பிக்-அப்பின் தயாரிப்பு வெர்ஷனின் வெளியீட்டு விவரங்களை வாகன உற்பத்தியாளர் வெளியிடவில்லை என்றாலும், இந்த கான்செப்ட் ஆகஸ்ட் 15 அன்று சவுத் ஆஃப்ரிக்காவில் பிராண்டின் உலகளாவிய நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும். மேலும் விவரங்கள் வரும் வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்