- டொமெஸ்டிக் கார் விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளது
- ஆகஸ்ட் மாதத்தில் 2,423 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் செய்யப்பட்டது
இந்தியாவின் முன்னணி எஸ்யுவி உற்பத்தியாளர்களில் ஒன்றான மஹிந்திரா, ஆகஸ்ட் 2023 இல் 37,270 யூனிட்ஸ் விற்பனை செய்து ஒரு ஒரு ஆண்டிற்க்கும் 26 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் 29,516 யூனிட்ஸ் விற்பனையானது. இது தவிர, கார் தயாரிப்பாளர் 2,423 யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்துள்ளது மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான விற்பனை 23,613 யூனிட்ஸாக உள்ளது.
மற்ற செய்திகளில், இந்த பிராண்ட் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என்-அடிப்படையிலான குளோபல் பிக்-அப் மற்றும் தார்.இ’யின் கான்செப்ட் வெர்ஷன்ஸை காட்சிப்படுத்தியது. பிக்-அப் ட்ரக் லேடர் ஆன்-ஃப்ரேம் சாஸ்ஸிஸ் இல்ல் கட்டப்பட்டிருந்தாலும், தார்.இ ஐசிஇ வெர்ஷனின் நிழற்படத்தை ஒருங்கிணைக்க தனிப்பயனாக்கப்பட்ட இங்க்ளோ-P1 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது.
விற்பனை குறித்து கருத்து தெரிவித்த எம் & எம் லிமிடெட், வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா, “ஒரு மாதத்திற்கு 26 என்ற வளர்ச்சியுடன் 37,270 என்ற எங்களின் அதிகபட்ச எஸ்யுவி டொமெஸ்டிக் விற்பனையை எட்டியதால், மற்றொரு சாதனை மாதத்தைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். எங்களின் முக்கிய எஸ்யுவி பிராண்ட்ஸ்க்கான தேவை தொடர்ந்து வலுவாக இருக்கும் அதே வேளையில், நிலையான மற்றும் சீரான அளவிற்கான செமி-கண்டக்டர்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்கள் கிடைப்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்