- 172bhp/400Nm டோர்க் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது
- சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது
இந்த ஸ்கார்பியோ பிராண்ட் மஹிந்திரா விற்கு பொலேரோ போன்ற வெற்றிகரமான ஒன்றாகும். இப்போது, ஸ்கார்பியோ-என் கூட 'ஸ்கார்பியோ' நேம்பிளேட்டின் ஒரு சிறந்த கூடுதலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உட்பட வாடிக்கையாளர்களின் பல்வேறு தேர்வுகள் எஸ்யுவியின் நவீன அவதாரம் ஆகும். இதை அதன் மைலேஜுக்காக நாங்கள் டெஸ்ட் செய்துள்ளோம், மேலும் எங்களின் ரியல்-வேர்ல்டு ஃபியூல் எஃபிஷியன்சி டெஸ்ட்டில் இது எப்படி இருந்தது என்பதை தெரிவிக்கிறோம்.
சிட்டியில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மைலேஜ்
எஸ்யுவிக்கான மைலேஜ் விவரத்தை மஹிந்திரா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆயினும், நாங்கள் எங்கள் ரியல்-வேர்ல்டு பர்ஃபார்மன்ஸ் மற்றும் எஃபிஷியன்சி டெஸ்ட்டை நகரத்தைச் சுற்றி எங்களுக்கு நியமிக்கப்பட்ட டெஸ்ட் ரூட்டில் தொடங்கினோம். 78.2 கி.மீ தூரத்தை முடித்த பிறகு, அது 6.43 லிட்டர் டீசலை எடுத்தது, லிட்டருக்கு 12.16 கி.மீ மைலேஜைத் தருகிறது.
ஹைவேயில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மைலேஜ்
பின்னர், ஹைவே ஓட்டத்தில், எஸ்யுவி 80.6 கி.மீ ஓடி 5.5 லிட்டர் டீசலை எடுத்தது. இது லிட்டருக்கு 14.64 கி.மீ ஹைவே மைலேஜைத் தருகிறது, இது சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் இது கனரக வாகனம் என்பதால் திருப்திகரமாக உள்ளது. இதன் விளைவாக, இது சராசரியாக லிட்டருக்கு 13.4 கி.மீ ரியல்-வேர்ல்டு மைலேஜ் மற்றும் 57 லிட்டர் ஃபியூல் டேங்க் மூலம் 763 கி.மீ வரை ஓட்ட முடியும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரக்குறிப்புகள்
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களைக் கொண்டுள்ளது - 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் இந்த 2.2 லிட்டர் டீசல் இன்ஜின். இரண்டுமே சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வருகின்றன. டீசல் மோட்டார் 172bhp, 400nm டோர்க்கையும் வெளிப்படுத்தும் போது, பெட்ரோல் மில் 200bhp பவரையும், 380nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்