- இந்த மைல்ஸ்டோன் அனைத்து ஸ்கார்பியோ ரேஞ்சுக்கு பொருந்தும்
- ஸ்கார்பியோ-என் இந்திய மார்க்கெட்டில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது
மஹிந்திரா ஸ்கார்பியோ புதிய சாதனையை எட்டியது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முதலில் 2002 ஆம் ஆண்டு ஸ்கார்பியோ எஸ்யுவியை அறிமுகப்படுத்தியது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, கார் தயாரிப்பு நிறுவனம் இப்போது நாட்டில் 9 லட்சம் யூனிட் உற்பத்தியை தாண்டிய மாடலைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரேஞ்ச் மற்றும் விலை
இந்தியாவில், மஹிந்திரா தற்போது ஸ்கார்பியோ க்ளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் எனப்படும் இரண்டு மாடல்ஸை ஸ்கார்பியோ பெயர்ப்பலகையின் கீழ் விற்பனை செய்கிறது. பழைய ஜெனரேஷன் எஸ்யுவியின் அப்டேடட் வெர்ஷனாகும், இதன் விலை ரூ.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மறுபுறம், ஸ்கார்பியோ என் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய மாடலாகும், தற்போது இதன் விலை ரூ.13.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த பிராண்ட் இந்தியாவில் ஸ்கார்பியோ எனின் முதல் ஆண்டு நிறைவைக் குறித்தது.
மஹிந்திரா ஸ்கார்பியோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
இந்த வார தொடக்கத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெயிட்டிங் பீரியட் 65 வாரங்களில் இருந்து 55 வாரங்களாக குறைந்துள்ளது. மே 2023 நிலவரப்படி, இந்திய ஆட்டோமொபைல் பிராண்ட் ஸ்கார்பியோ ரேஞ்சிற்கு 1.17 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைக் கொண்டுள்ளது, இதில் ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் மாடல்ஸ் அடங்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்