- தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கார்பியோ என் வேரியன்ட்ஸின் விலையில் மாற்றங்கள்
- இப்போது ஸ்கார்பியோ என் ரூ. 13.85 லட்சத்திலிருந்து ரூ. 24.54 லட்சம் ரேஞ்சுக்கு விற்கப்படுகிறது
மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலை குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் தார், ஸ்கார்பியோ என் மற்றும் மஹிந்திரா பொலேரோ ஆகியவை அடங்கும். இப்போது, இந்த கட்டுரையின் மூலம் ஸ்கார்பியோ என் மாடல் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம்.
ஸ்கார்பியோ Z2 மற்றும் Z4 வேரியன்ட்ஸின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்டில் விற்கப்படுகின்றன, Z6 டீசல் வெர்ஷன் ரூ. 25,000 விலை உயர்வு. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கூடிய Z8 2WD வெர்ஷன் ஒவ்வொன்றும் ரூ. 10,000 விலை உயர்வு.
இந்த விலை உயர்வுடன், என்ட்ரி லெவலான Z2 பெட்ரோல் MT 7-சீட்டர் மஹிந்திரா ஸ்கார்பியோ என் ரூ. 13.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-எண்ட் Z8L டீசல் ஏடீ 4WD 7-சீட்டர் ரூ. 24.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). வாடிக்கையாளர்கள் ஆறு வேரியன்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம்: Z2, Z4, Z6, Z8, Z8S மற்றும் Z8L.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்