- 2025 ஆம் ஆண்டு மார்க்கெட்க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- ஸ்கார்பியோ-என் பிக்-அப் சன்ரூஃப் உடன் பெறலாம்
மஹிந்திரா & மஹிந்திரா தனது ஸ்கார்பியோ என் அடிப்படையிலான பிக்-அப் ட்ரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா இந்த புதிய ஸ்கார்பியோ-என் பிக்-அப் ட்ரக்கை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
புதிய தலைமுறை இன்ஜின் மற்றும் டிரைவ் மோட்ஸ்
லேடர் ஆன்-ஃப்ரேமில் கட்டப்பட்ட இந்த வாகனம் அடுத்த ஜெனரேஷன் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது முழுக்க முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்டது. சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.
இதில் 4WD அதாவது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படும். இதனுடன், லோ-ரேஞ்ச் மோடில்லும் கிடைக்கும், இதன் மூலம் நீங்கள் பல்வேறு வகையான சாலைகளில் அதை சுழபமாக இயக்க முடியும். வெவ்வேறு சாலைகளை பற்றி பேசுகையில், இது நிலப்பரப்பின் அடிப்படையில் ஜிப், ஜாப், ஜூம் மற்றும் கஸ்டம் ஆகிய நான்கு டிரைவ் மோடுஸின் விருப்பத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக சொன்னால், சாதாரண சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கான ஒரு பயன்முறை, புல், பாறைகள் நிறைந்த சாலைகள் மற்றும் பனி ஆகியவற்றிற்கான ஒரு பயன்முறை மற்றும் சேறு அல்லது சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் ஆகியவற்றிற்கான ஒரு பயன்முறையைப் பெறுவீர்கள்.
ஸ்கார்பியோ என் பிக்-அப் ஃபீச்சர்ஸ்
லெவல்-2 ஆட்டோனோமஸ் சிஸ்டம், 5G கனெக்டிவிட்டி, செமி ஆட்டோமேட்டிக் பார்க்கிங், எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை இதில் வழங்கப்படும். இந்த பிக்-அப்பில் மூன்று ஸ்கிரீன் இருக்கும். ஒவ்வொரு ஸ்கிரீனின் அளவும் 12.3-இன்ச் இருக்கும். இதில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டிரைவ் டிஸ்ப்ளே சக பயணிகளுக்கு இருக்கும்.
மஹிந்திரா பிக்-அப் டிசைன்
கான்செப்ட் மாடலின் படங்களைப் பார்த்தால், இது ஸ்கார்பியோ-என் அடிப்படையிலானது என்பது புரியும். பம்பர் ஒரு புதிய பெரிய பேஷ் பிளேட், டோ ஹூக், கிரில் மறுபுறம் மிகவும் கவர்ச்சிகரமாக மற்றும் ஃப்ரண்ட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, எல்இடி ஹெட்லைட்ஸ், ஃபோக் லேம்ப்ஸ் இதில் காணப்படுகிறது. இந்த பிக்-அப் ட்ரக் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் அனைத்து ஏஷியன் நாடுகளில் விற்பனை செய்யப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்