- புதிய அம்சங்கள் டாப்-ஸ்பெக் வேரியன்ட்ஸிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன
- மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷன் இப்போது அனைத்து Z8 வேரியன்ட்ஸிலும் கிடைக்கிறது
மஹிந்திரா தனது எஸ்யுவி, ஸ்கார்பியோ N இன் அம்சங்களை மாற்றியுள்ளது. புதிய அப்டேட்டுடன், இந்த மாடல் இப்போது வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் போன்ற அம்சங்களைப் பெறுகிறது. புதிய அம்சங்களைக் கொண்டு வந்த போதிலும், வாகன உற்பத்தியாளர் வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Z8 (S) மற்றும் Z8 வேரியன்ட்ஸில் மட்டுமே வயர்லெஸ் சார்ஜர் மற்றும் சென்டர் கன்சோலில் ஹை க்ளோஸ் ஃபினிஷ் பெறுகின்றன, அதே நேரத்தில் Z8 L மாறுபாடு மட்டும் இரண்டு கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது - ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்’ஸ் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ். கூடுதலாக, ஸ்கார்பியோவின் அனைத்து Z8 வேரியன்ட்ஸிலும் இப்போது மிட்நைட் பிளாக் எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஸ்கீமைப் பெறுகின்றன.
Z8 S வேரியன்ட் | Z8 வேரியன்ட் | Z8L வேரியன்ட் |
வயர்லெஸ் சார்ஜர் | வயர்லெஸ் சார்ஜர் | வயர்லெஸ் சார்ஜர் |
சென்டர் கன்சோலில் ஹை க்ளோஸ் ஃபினிஷ் | சென்டர் கன்சோலில் ஹை க்ளோஸ் ஃபினிஷ் | சென்டர் கன்சோலில் ஹை க்ளோஸ் ஃபினிஷ் |
- | - | ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் |
- | - | வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் |
ஆட்டோமேக்கர் அதன் ஃபிளாக்ஷிப் எஸ்யுவியான, ஸ்கார்பியோ N மற்றும் XUV700 வேரியன்ட்ஸ்க்கான மேம்படுத்தப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பர்ன்ட் சியன்னா மற்றும் டீப் ஃபாரஸ்ட் உள்ளிட்ட இரண்டு லட்சம் உற்பத்தி மைல்கல்லைக் குறிக்கும் வகையில் XUV700க்கு இரண்டு புதிய எக்ஸ்டீரியர் வண்ணங்களை பிராண்ட் அறிமுகப்படுத்தியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்