- 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் 130bhp/300Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது
- சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும்
மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக்கின் அறிமுகம்
மஹிந்திரா ஸ்கார்பியோ பிராண்ட் ஸ்கார்பியோ-என் அறிமுகத்துடன் மறுபிறவி எடுத்தது, ஆனால் அப்போதைய மாடல் இன்னும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஆக உள்ளது. மேலும் இது நிறுத்தப்பட்ட மாடலைப் போலவே தோன்றினாலும், இது பழையதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 55 கிலோ எடை குறைந்ததாகவும், 14 சதவீதம் அதிக ஃபியூல் திறன் கொண்டதாகவும் இருப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். விரிவான சிட்டி மற்றும் ஹைவே ஃபியூல் திறன் சோதனை, நிஜ உலகில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
ஸ்கார்பியோ க்ளாசிக் காரில் 130bhp பவரையும், 300nm டோர்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் ஜென்-2 எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் உள்ளது. இந்த யூனிட் 1,000rpm இல் 230nm லோ-எண்ட் டோர்க்கை வழங்குகிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக்கின் உண்மையான மைலேஜ்
கார் தயாரிப்பாளர் ஸ்கார்பியோ க்ளாசிக்கை இரண்டு வேரியண்ட்ஸில் வழங்குகிறது மற்றும் அவை இரண்டிற்கும் உண்மையான மைலேஜை வழங்கவில்லை. நாங்கள் S11 வெர்ஷனை டெஸ்ட் செய்தோம், அதின் விவரங்கள் இதோ.
மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக்கின் கார்வாலே டெஸ்ட் செய்த மைலேஜ்
எங்கள் சோதனையில் 80 கி.மீ ஓட்டத்திற்கு ஸ்கார்பியோ க்ளாசிக் சிட்டிக்குள் லிட்டருக்கு 13.06 கி.மீ மைலேஜ் கிடைதது. இருப்பினும், ஹைவேயில், அது குறைந்த ஃபியூலில், லிட்டருக்கு 16.53 கி.மீ ஃபியூல் எகானமியை வழங்கியது. 1,790 கிலோ எடையுள்ள இந்த லேடர்-ஆன்-ஃப்ரேம் எஸ்யுவிக்கு இது சராசரியாக லிட்டருக்கு 14.8 கி.மீ ஆகும். இதை தவிர, இது 60 லிட்டர் டேங்க் கபாஸிட்டியை கொண்டுள்ளது, இது 888 கிமீ டிரைவிங் ரேஞ்ச்சை வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்