- மொத்த விற்பனை 70,576 யூனிட்ஸை தாண்டியது
- ஏற்றுமதியில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது
பஸ்சேன்ஜ்ர் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு
மஹிந்திரா நவம்பர் 2023 க்கான விற்பனை புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது, இது கடந்த மாதம் உள்நாட்டு சந்தையில் மொத்தம் 39,918 பஸ்சேன்ஜ்ர் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த பிராண்ட் மொத்தம் 30,981 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியில் சரிவு காணப்படுகிறது
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சர்வதேச சந்தையில் மஹிந்திரா வாகனங்களுக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 நவம்பரில் 3,122 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை, தற்போது 1,816 ஆகக் குறைந்துள்ளது.
கமர்ஷியல் மற்றும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை எப்படி இருந்தது?
கமர்ஷியல் மற்றும் 3 சக்கர வாகனங்களைப் பற்றி பேசுகையில், மஹிந்திரா 6,568 யூனிட் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் விற்பனையை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர, நிறுவனம் 22,211 கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரின் அறிக்கை
மஹிந்திரா & மஹிந்திரா தலைவர் விஜய் நக்ரா கூறுகையில், 'எங்கள் அனைத்து எஸ்யுவிகளின் தேவை மிக அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விற்பனையில் 32 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம். ஆனால், இந்த மாதம் சில உதிரிபாகங்கள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்