- இது முந்தைய மஹிந்திரா லோகோவைக் கொண்டுள்ளது
- இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்படலாம்
1,470 ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யுவிஸை வழங்க இந்திய ராணுவம் மஹிந்திராவிடம் பணித்தது. இந்த வாகனங்களை மஹிந்திராவின் துணை நிறுவனமான மஹிந்திரா டிஃபென்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் வாகனங்கள் புனேவில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப்ஸில் காணப்பட்டது. சில காலத்திற்கு முன்பு மஹிந்திராவும் அர்மடோ ஏஎல்எஸ்வியை இந்திய ராணுவத்திற்கு வழங்கியது.
இந்திய ராணுவத்திற்கான சேர்க்கப்பட்ட சிறப்பு அம்சங்கள்
மஹிந்திரா மோட்டார்ஸ் டீலர்ஷிப்பில் இந்த வாகனங்கள் பச்சை நிறத்தில் காணப்பட்டன. மேலும், எல்இடி இல்லாத டெயில்லைட்ஸ், பின்புறத்தில் சாமான்களை தொங்கவிடுவதற்கான ஹூக்ஸ் மற்றும் மோசமான சாலைகளில் ஓடுவதற்கு 4WD அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாதத்தின் புதிய ட்வின்-பீக் லோகோவிற்குப் பதிலாக, பழைய லோகோ சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம். இந்த அம்சங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக புதிய டாப்-ஸ்பெக் S11 ட்ரிம்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, பிளாக்அவுட் லைட்ஸ், இரண்டு ப்ரேக்ஸ் மற்றும் ரிவர்ஸ் லைட்ஸ் போன்ற அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கார்பியோ கிளாசிக் சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜினைப் பெறும்
ராணுவத்திற்காக தயாராகி வருவதால், அதற்கு அதிக பலமும் இருக்க வேண்டும். எனவே மஹிந்திரா வலுவான பாகங்கள் மற்றும் சிறந்த சஸ்பென்ஷன், இன்டீரியர் லைட்ஸ், கிராப் ஹேண்டல்ஸ் மற்றும் மைக் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்ஸை உள்ளடக்கியுள்ளது. அதே நேரத்தில், இது 2.2 லிட்டர் BS4 இன்ஜினைக் கொண்டுள்ளது, அதன் பவர் ஸ்டாண்டர்ட் ஸ்கார்பியோ கிளாசிக்கிலிருந்து வேறுபட்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்