- ஒரு ஒரு ஆண்டிற்கும், 22.10 சதவீதம் வரை உற்பத்தியை அதிகரித்துள்ளது
- உற்பத்தி பட்டியலில் பொலேரோ முதலிடத்தில் உள்ளது
2023 மே மாதத்தில் மஹிந்திரா மொத்தம் 30,992 யூனிட் பஸ்சேன்ஜ்ர் கார்ஸை தயாரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 25,381 யூனிட்ஸுடன் ஒப்பிடும் போது 22.10 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
மே 2023 இல் மஹிந்திரா பொலேரோ, ஸ்கார்பியோ மற்றும் XUV700 இன் தயாரிப்பு:
கடந்த மாதம் 7,793 யூனிட்ஸ் தயாரிக்கப்பட்டு மே 2023க்கான தயாரிப்பு பட்டியலில் மஹிந்திரா பொலேரோ ஆதிக்கம் செலுத்துகிறது. இதைத் தொடர்ந்து ஸ்கார்பியோ மற்றும் XUV700 ஆகியவற்றின் டீசல் வேரியண்ட் முறையே 7,236 யூனிட்ஸ் மற்றும் 3,708 யூனிட்ஸ் உள்ளது. மறுபுறம், ஸ்கார்பியோ மற்றும் XUV700 இன் பெட்ரோல் வேரியண்ட், முறையே 621 யூனிட்ஸ் மற்றும் 1,569 யூனிட்ஸை பதிவு செய்தது.
மே 2023 இல் தார் மற்றும் XUV300 இன் தயாரிப்பு:
சென்ற மாதத்தில் டீசல் வேரியண்ட்டில் 2,512 யூனிட்ஸும், பெட்ரோல் வேரியண்ட்டில் 1,061 யூனிட்ஸும் தயாரிக்கப்பட்டன. XUV700 இன் சின்ன மாடலான XUV300, மே 2023 இல் 5,241 யூனிட்ஸாக இருந்தது.
மே 2023 இல் XUV500 மற்றும் அல்டுராஸின் யூனிட்ஸ் தயாரிக்கப்படவில்லை:
மே மாதத்தில் KUV100 இன் 325 யூனிட்ஸும், மராஸ்ஸோவின் 36 யூனிட்ஸும் மட்டுமே தயாரிக்கப்பட்டன. மறுபுறம், XUV500 மற்றும் அல்டுராஸ் G4 இன் பூஜ்ஜிய யூனிட்ஸ் உற்பத்தி செய்யப்பட்டது, ஏனெனில் நிறுவனம் இந்த மாடல்ஸை அதன் ஆஃபீஷியல் வெப்சைட்டில் இருந்து விலக்கியது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்